பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் எட்டு வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்... முதியவரை கொன்று 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!
இந்த சம்பவத்திற்கு 12 வயது மற்றும் 13 வயது சிறுவர்கள் காரணம் என்பது மேலும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. டெல்லி ஒக்லா பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுமியை அருகில் உள்ள குடோனுக்கு இழுத்துச் சென்று சிறுவர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?