நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.
அதற்கு முன்னதாக சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டார். திறந்த வெளி ஜீப்பில் பயணித்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை விஜய் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு படையினரும் மரியாதை அளித்தனர். காவல்துறையின் அலங்கார அணிவகுப்பையும் திறந்த ஜீப்பில் நின்றபடி கண்டு ரசித்தார்
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, நடிகை த்ரிஷா ஆகியோர் அருகருகே அமர்ந்தனர். விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனுடன் சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காமராஜர் சாலையின் ஒருபகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
ஆளுநர் தேநீர் விருந்து ரத்து:
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய கொண்டாட்டத்தின் போது ஆளுங்கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மாநில ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் அர்லேகர், கேரளாவுக்கும் ஆளுநராக செயல்பட்டு வருவதால் இன்று கேரளா செல்கிறார். எனவே சுதந்திர தின தேநீர் விருந்து நடைபெறாது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “காலத்தின் கட்டாயம்...” - சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய மெசெஜ்...!
இதையும் படிங்க: #BREAKING சுதந்திர தினத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’... செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!