• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

    அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், ரேஷன் கடைகளில் பொருட்களை இலவசமாக வழங்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 24 Aug 2026 17:53:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Control Surge in Rice, Sugar & Pulse Prices": CPI Urges Central and TN Governments.

    தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த விலை உயர்வை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய விலை ஏற்றம் குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் வரை கிலோ 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சர்க்கரையின் விலை, தற்போது கடுமையான தட்டுப்பாட்டின் காரணமாக 70 ரூபாய் வரை எகிறியுள்ளது. 

    CPI

    பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீவிரக் கொள்கையின் விளைவாக, சுமார் 25 லட்சம் டன் கரும்பு சர்க்கரை ஆலைகளிலிருந்து எத்தனால் தயாரிப்புக்குத் திருப்பி விடப்பட்டதே இந்தச் சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சிக்கும் கடுமையான விலை ஏற்றத்திற்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி, தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களில் சர்க்கரையின் தேவை பலமடங்கு அதிகரிக்கும் சூழலில், இந்த விலை உயர்வு ஏழை எளிய குடும்பங்களின் பட்ஜெட்டை அடியோடு சிதைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மாநில உரிமைகள் பறிப்பு! புதிய கனிமவள சட்டத்திருத்தத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

    ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளைகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டதால், சாலையோரத் தேநீர்க் கடைகளில் கூட ஒரு கப் தேநீர் விலை 15 ரூபாயாகவும், காபி விலை 20 ரூபாயாகவும் உயர்ந்தது. தற்போது சர்க்கரை விலையும் கூடியுள்ளதால் டீ, காபி விலைகள் மீண்டும் எகிறும் பேராபத்து எழுந்துள்ளது. மற்றொருபுறம் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட விளைச்சல் சரிவு மற்றும் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்படைந்த காரணங்களால் சாப்பாட்டுப் பொன்னி அரிசி கிலோ 80 ரூபாய்க்கும், இட்லி அரிசி கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அத்துடன் உளுத்தம் பருப்பு கிலோ 120-லிருந்து 150 ரூபாயாகவும், கடலைப் பருப்பு 80-லிருந்து 100 ரூபாயாகவும், தனியா 160-லிருந்து 250 ரூபாயாகவும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

    எனவே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தச் சந்தை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலமாக அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் வழங்குவதுடன், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் ரேஷன் கடைகள் வாயிலாக முற்றிலும் இலவசமாக வழங்கிடத் தமிழ்நாடு அரசு உடனடியாக முன்வர வேண்டும் எனவும் அக்கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பங்கேற்க தடை... இடதுசாரி கட்சிகள் தலையில் இடியை இறங்கிய விஜய்... கரப்பான் பூச்சிக்கும் மரண அடி...!

    மேலும் படிங்க
    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    தமிழ்நாடு
    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    இந்தியா
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share