அவசர உலகில் வீட்டிலிருந்தபடியே உணவுகளை பெரும் விதமாக ஸ்விகி மற்றும் சொமோட்டோ நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வந்தன. பல்வேறு ஹோட்டல்களிலும் வீட்டில் இருந்தே ஆப் மூலமாக நாம் உணவுகளை புக் செய்தால் அவை வீடுகளுக்கே உடனடி டெலிவரி செய்து வந்தன.
இந்த நிலையில் அந்த டெலிவரி நிறுவனங்கள் தற்போது கமிஷன் தொகையை அதிக அளவில் உயர்த்தி உள்ளதால் பொதுமக்களின் கைகளுக்கு உணவுப் பொருட்கள் கிடைக்கும் பொழுது 40 சதவீதம் வரை அதன் விலை உயர்ந்துவிடுகிறது. மேலும் உணவகங்களுக்கான தனது கமிஷன் தொகையை இந்த நிறுவனங்கள் உயர்த்தியது.
இதனால் உணவகம் நடத்துபவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் ஸ்விக்கி மற்றும் ஜோமேட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஸ்விக்கி, ஜோமேட்டோவை இன்று முதல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: போர் நெருக்கடியை சமாளிக்க ஹெல்ப் பண்ணீங்க!! இந்தியாவுக்கும் சீனாவுக்கு புடின் பாராட்டு!!
மேலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் துவக்கியுள்ள Zaaroz எனப்படும் உணவு டெலிவரி ஆப்பினை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த சாரோஸ் உணவு டெலிவரி ஆப் தற்போது தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தி உணவு டெலிவரி செய்யும் முறையை இன்று முதல் தொடங்கியுள்ளனர். இந்த உணவு டெலிவரி ஆப் மூலம் நாம் செய்யும் உணவுக்கு குறைந்த அளவு மட்டுமே கமிஷன் என்பதால் குறைந்த தொகை மட்டுமே உயர்ந்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அன்புமணி தலைக்கு மேல் தொங்கும் கத்தி... செப்.3ம் தேதி முடிவை அறிவிக்கும் ராமதாஸ்... எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு தகவல்...!