கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரியின் நகை காணாமல் போனது குறித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன நகை மீட்கப்பட்டதாக காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் அப்பெண்ணிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் புகார் அளித்த பெண்ணின் சகோதரியிடம் whatsapp மூலம் பேசிய காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் நகையை வாங்க நீங்கள் காவல் நிலையம் வரவேண்டாம் என்றும் நானே வீட்டிற்கு வந்து தருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் நன்றாக பேசிய காவல் ஆய்வாளர், சிறிது நேரற்த்திகு பிறகு சாப்பிட்டீர்களா இல்லையா, whatsapp DP- ஐ நன்றாக தெரியும்படி வைக்கலாமே என்றெல்லாம் பேசி உள்ளார். இது மட்டும் இன்றி அவர், அப்பெண்ணின் புகைப்படத்தை அவருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள சோலார் திட்டங்கள்...! 3500 பேருக்கு வேலை... கலக்கும் தமிழக முதலமைச்சர்
மேலும் எனக்கு உங்கள் போட்டோவை தனிப்பட்ட முறையில் அனுப்புங்களேன் ப்ளீஸ் என கெஞ்சும் குரலில் பேசியுள்ளார் காவல் ஆய்வாளர். இதனால் மனமடைந்த பெண் காவல் ஆய்வாளர் பேசிய ஆடியோவை ரெக்கார்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 24 மணி நேரம் கெடு: தமிழக கவர்னர் ரவி மௌனமாக இருப்பது ஏன்? அதை எப்படி எடுத்துக் கொள்வது? உச்சநீதிமன்றம் கேள்வி