தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பணம் மற்றும் இலவச பொருட்கள் விநியோகத்தை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து முறைப்படி தொடங்குகிறார். இது திமுகவுக்கு மட்டுமல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர், ஸ்டாலினின் பரப்புரைக்கு தொடக்கப் புள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பெரும் அடையாள முக்கியத்துவம் கொண்டது. திருவாரூர் பரப்புரைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் தஞ்சையிலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: பாஜகவின் "A TEAM" தான் திமுக... கல்விக்கடன் கொடுக்க வட்டிக்கடையா நடத்துறீங்க? சீமான் சரமாரி கேள்வி..!!
அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினின் பரப்புரை வாகனத்தை நிறுத்தினர். முதல்வர் ஸ்டாலின் பரப்புரை வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது. சோதனைக்குப் பிறகு முதலமைச்சரின் பிரச்சார வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்..! திமுக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்... முழு விவரம்..!!