ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் ஏட்டு முருகன் (38) ஒரு பெண் போலீஸ் உட்பட இரு போலீசார் நேற்று முன்தினம் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் போலீஸ்காரர்களை தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் ஏட்டு முருகனை ஓடி ஓடி விரட்டி சென்று அரிவாளால் வெட்ட முயன்றார். இதில் முருகன் சுதாரித்துக் கொண்டு தப்பினார். எனினும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்காசி எஸ் பி அரவிந்தன், ஆலங்குளம் டிஎஸ்பி கிளட்ஸன் ஜோஸ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அம்பை அருகே உள்ள பொத்தை பகுதியை சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவருக்கும், ஆலங்குளத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெட்டூரில் உள்ள மனைவியின் வீட்டுக்குச் சென்ற இசக்கிப்பாண்டி, குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அதற்கு மகாலட்சுமி வரமறுத்ததால் இசக்கிப்பாண்டி நண்பருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் இரு தினங்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மனைவிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கருதிய இசக்கி பாண்டியன் ஆத்திரமடைந்து தனது உறவினர்களுடன் போலீசாரத் தாக்க முற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தலைமை காவலரைத் தாக்கிவிட்டு, தலைமறைவான முத்துப்பாண்டி உள்ளிட்டோர் மீது உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்த ஆலங்குளம் போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தப்பியோடிய இசக்கி பாண்டி நெல்லை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து போலீசார் அங்கு சென்று இசக்கி பாண்டி மற்றும் அவர்கள் உறவினர் பெரியதுரை ஆகிய இரண்டு பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: “எய்ம்ஸ், மெட்ரோ வேணுமா? திருப்பரங்குன்றம் தீபம் வேணுமா?” - மதுரை மக்களே முடிவு பண்ணுங்க... மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்...!
இதையும் படிங்க: 20 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சரிவு... ஒரே நாளில் 550 விமானங்கள் ரத்து... பிப்.10 வரை இதுதான் நிலையா?