மாமியாருடன் எஸ்கேப்பான மருமகன் வழக்கில் காவல்துறை இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. அந்த இளைஞரின் நண்பர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துள்ளனர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மாமியாரையும், மருமகனையும் அழைத்து வர ஒரு குழு அனுப்பப்பட உள்ளது.
மட்ராக்கின் மனோகர்பூர், கயஸ்தாவைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி டாடோனைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு முன்பு, பெண்ணின் தாய் தனது வருங்கால மருமகனுடன் ஓடிவிட்டார். அப்போதிருந்து இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

மகளும், அவளுடைய தந்தையும் இப்போது ஓடிப்போன தாயுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். ஓடிப்போன இளைஞனின் குடும்பத்தினரும் எந்த உறவையும் வைத்துக் கொள்ள முன் வரவில்லை. இரண்டு குடும்பத்தினரும் காவல்துறையினரை ஒருமுறை தொடர்பு கொள்ள உதவ வேண்டும் என்று விரும்புகிறார்கள். வீடுகளில் இருந்து அவர்கள் எடுத்துச் சென்ற நகைகள் மற்றும் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
இதையும் படிங்க: மாப்பிள்ளையை இழுத்துக்கொண்டு ஓடிய மாமியார்… திருமணத்திற்கு ரெடியான மகள் ஏமாற்றம்!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடிப்போன இளைஞனின் மைத்துனர், தந்தை, பிற குடும்ப உறவினர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். அந்த இளைஞர் ஓடிப்போக அவரது நண்பர்கள் சிலர் உதவி செய்துள்ளனர். இது குறித்து, போலீசார் அந்த நண்பர்களை விசாரணைக்காக அழைத்துள்ளனர். வருங்கால மருமகனுடன் எஸ்கேப்பான பெண்ணின் எந்த தடயமும் இன்னும் கிடைக்கவில்லை.

ஓடிப்போன இளைஞரின் தந்தை, தனது மகனை ஒரு தாயத்தைப் பயன்படுத்தி மாமியார் ஹிப்னாடிஸ் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த இளைஞனின் தந்தை, ''எனது மகனின் மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்தபோது, அவனுக்கு இரண்டு தாயத்துக்களைக் கட்டி விட்டார். அன்றிலிருந்து மகனின் நடத்தை மாறியது. அந்த பெண் எங்களை ஏமாற்றி விட்டார். எனது மகன் உடல்நிலை சரியில்லாமல் போனபோது, அவனது வருங்கால மாமியார் இங்கு வந்து ஐந்து நாட்கள் தங்கி இருந்தார். அப்போதுதான் அவள் என் மகனுக்கு இரண்டு தாயத்துக்களைக் கொண்டு வந்தாள்.
ஒரு தாயத்து கழுத்திலும் மற்றொன்று இடுப்பிலும் கட்டப்பட்டிருந்தது. இப்போது அவர் இப்படி ஓடிப்போனது அனைத்தும் அதே தாயத்து செய்த மந்திரத்தின் விளைவு என்பது உணரப்படுகிறது. அந்தப் பெண் எங்கள் மகனை ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டாள்.
இப்போது நாங்கள் எங்கள் மகனை வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவரை வெளியேற்றுவோம்.
மகன் என்ன செய்தானோ அது அந்தப் பகுதியிலும், சமூகத்திலும் எங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டது. அதனால், இப்போது என் மகனை வீட்டில் வைத்திருக்க மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டேன். சொத்தும் தர மாட்டேன். என் மகன் வீட்டிலிருந்து சில நகைகள், பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார். அதை திரும்பப் பெற காவல்துறை கேட்டுக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரில் வசிக்கும் அந்த இளைஞரின் மைத்துனர், அவரது தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக மட்ராக் போலீசார் அழைத்தனர். அவர்களில் மைத்துனர்தான் காவல்துறையினரால் அதிகம் குறிவைக்கப்படுகிறார். இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் உத்தரகண்டில் சந்தித்த இடம்தான். விசாரணை மாலை வரை தொடர்ந்தது. விசாரணை மற்றும் தேடுதல் பணி இன்னும் நடந்து வருகிறது.
ஓடிப்போன அந்தப் பெண்ணின் கணவர் இரவு 10 மணியளவில் தனது வருங்கால மருமகனுக்கு போன் செய்ததாகக் கூறினார். அப்போது ஓடிப்போன மருமகன், தனது மாமனாரிடம், ''நீங்கள் என் மாமியார் காதலியை 19 வருடங்களாகத் துன்புறுத்தி உள்ளீர்கள். மிரட்டி, உங்கள் திருமண வாழ்க்கையின் 19 ஆண்டுகளாக மனைவியை நீங்கள் நிறைய துன்புறுத்தி இருக்கிறீர்கள். இப்போது அவளை மறந்துவிடு. இல்லையென்றால் உன் வீட்டைப் பாழாக்கிவிடுவேன்'' என தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார். இப்போது போலீசார் அவரைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணின் கணவரே தனது மௌனத்தைக் கலைத்து, ''எனது வருங்கால மருமகனுக்கு மொபைல் போன் வாங்கித் தருமாறு வற்புறுத்தியவர் எனது மனைவிதான். ஆனால் அவர் சில நேரம்தான் எனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். நாள் முழுவதும் எனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது எல்லா விஷயங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன'' எனக் கூறுகிறார்.
இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொன்ன விஜய் மல்லையா..! கொந்தளிக்கும் கன்னடர்கள்..!