ஜம்மு: தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான பரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு ஜம்மு கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள திருமண விழாவில் பரூக் அப்துல்லா கலந்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி உட்பட பலர் அவருடன் இருந்தனர்.
விழா முடிந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நபர் பரூக் அப்துல்லாவுக்கு மிக அருகில் வந்து, பாயிண்ட்-ப்ளாங்க் ரேஞ்சில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அந்த தோட்டு அவரை தாக்கவில்லை. பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு, தாக்குதல்காரரை மடக்கிப் பிடித்தனர். இதில் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி லேசான காயத்திற்கு ஆளானார். பரூக் அப்துல்லா பாதுகாப்பாக உள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கமல்சிங் ஜம்வால் (வயது 63) என்பவர் ஜம்மு புராணி மண்டி பகுதியைச் சேர்ந்தவர். அவரிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் அப்பாவுக்கு குறி! துப்பாக்கிச்சூடு பயங்கரம்! நூழிலையில் உயிர் தப்பிய பரூக் அப்துல்லா!
https://www.ndtv.com/video/farooq-abdullah-news-man-aims-at-farooq-abdullah-tries-to-pull-trigger-caught-in-time-1070810?t=27
விசாரணையில், அவர் மது போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதிர்ச்சி தரும் வகையில், கமல்சிங் போலீசாரிடம், “கடந்த 20 ஆண்டுகளாக பரூக் அப்துல்லாவை கொலை செய்ய திட்டமிட்டு வந்தேன். இது என்னுடைய தனிப்பட்ட விரோதம். இன்று வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் உயிர் தப்பியது அதிர்ஷ்டம். ஆயுதம் என்னுடையது தான்” என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தொடர்பு எதுவும் இல்லை என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தனிப்பட்ட காரணத்தால் நடந்த கொலை முயற்சி என்பது தெளிவாகியுள்ளது. Z+ பாதுகாப்பு பெற்ற தலைவர் மீது இவ்வாறு அருகில் சென்று தாக்குதல் நடத்தியது பாதுகாப்பு குறைபாடுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
முதல்வர் ஒமர் அப்துல்லா இந்த சம்பவத்தை கண்டித்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். “என் தந்தை எப்படி இவ்வளவு அருகில் செல்ல அனுமதிக்கப்பட்டார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் அப்பாவுக்கு குறி! துப்பாக்கிச்சூடு பயங்கரம்! நூழிலையில் உயிர் தப்பிய பரூக் அப்துல்லா!