• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மும்மொழி கல்வி விஷயத்தில் ஒரே நாடகம்.. திமுக அரசை டாராக கிழித்த அன்புமணி ராமதாஸ்!

    மாநிலக் கல்விக் கொள்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாததும், அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Jagatheswari Wed, 12 Mar 2025 21:05:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk leader Anbumani ramadoss criticized DMK government on three language policy

    இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பது குறித்த விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவது மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை போன்ற தமிழக நலன்களுக்கு எதிரான விஷயங்களில் திமுக அரசு தொடர்ந்து நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.மும்மொழிக் கொள்கை தொடர்பாக விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைக்க விருப்பம் தெரிவித்து மத்திய பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் சஞ்சய்குமாருக்கு கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி தமிழக அரசின் அன்றைய தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

    Anbumani Ramadoss
    மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இப்போது வீரமுழக்கமிடும் திமுக, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கையுடன் கூடிய பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தமிழக அரசு மிகவும் ஆர்வமாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதற்கான வாக்குமூலம்தான் இது என்பதை புரிந்து கொள்ள வல்லுனர்களின் பொழிப்புரையெல்லாம் தேவையில்லை. அதுமட்டுமின்றி, அந்தக் கடிதம் மத்திய அரசுக்கு எழுதப்பட்டதன் நோக்கமே எப்படியாவது மத்திய அரசின் நிதியுதவியைப் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அந்தக் கடிதத்தில், வல்லுனர் குழு பரிந்துரையைப் பெற்று 2024-25ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். அதனால் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதியை எங்களுக்கு உடனே வழங்குங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்ட தொனியை வைத்துப் பார்த்தாலே பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக அரசு தயாராகி விட்டதை அறியமுடியும்.

    இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா மட்டும் இருந்திருக்கணும்.. மும்மொழியை ஏற்றுக் கொண்டிருப்பார்.. டிடிவி தினகரன் ஒரே போடு!

     

    Anbumani Ramadoss
    அதுமட்டுமின்றி, தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் நாள் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமின்றி, “பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள். தமிழக மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் நாங்கள் மனமார வரவேற்கிறோம்” என்றும் தெரிவித்திருந்தது.

    பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம். ஆனால், தமிழக அரசு அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போதே திமுக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இப்படியாக பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு 100% தயாராகி விட்ட தமிழக அரசு, இப்போது புனிதர்களைப் போல நாடகமாடுகிறது.

    Anbumani Ramadoss

    மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை மட்டுமே மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடத்தையும், நாடகத்தையும் மறைத்து விட முடியாது. பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான கடிதம் இரு ஊராட்சி மன்ற கவுன்சிலர்களுக்கு இடையே எழுதப்பட்ட கடிதம் அல்ல. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஆகும். அதில் உள்ள விவரங்களுக்கு திமுகவினர் அவர்கள் விருப்பம்போல பொழிப்புரை எழுத முடியாது.

    தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு, இப்போதும் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதை இல்லை என்று தமிழக அரசால் மறுக்க முடியுமா? தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக முழங்கும் தமிழக அரசு, அது தயாரித்திருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாததும், அதன் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையவுள்ள நிலையில், அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஏன்?

    Anbumani Ramadoss


    தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் திமுக அப்பட்டமாக நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய நாடகங்களை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு கல்வித்துறையில் தமிழகத்தின் நலன்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாகவும். பாடமாகவும் அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எனக்கு 8 மொழிகள் தெரியும், குழந்தைகளால் பலமொழிகளைக் கற்கமுடியும்.. மும்மொழி கொள்கைக்கு சுதா மூர்த்தி ஆதரவு..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share