தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நாம்பள்ளி சந்தைப் பகுதியில் பல ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த ஒரு காலி வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞர் தனது ஃபேஸ்புக் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில், பாழடைந்த வீட்டிற்குள் சென்று, உள்ளே இருந்த எலும்புக்கூடை காண்பித்து பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ இணையவாசிகளிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு, வைரலாகியது.
இதை அறிந்த போலீசார், உடனடியாக அந்த இளைஞரை அடையாளம் கண்டு விசாரணையை தொடங்கினர். அந்த இளைஞர் ஒரு கிரிக்கெட் பந்து அந்த வீட்டிற்குள் விழுந்ததால், அதை எடுக்க சென்றதாகவும் வீட்டிற்குள் சென்றபோது, ஒரு மூலையில் எலும்புக்கூடு இருப்பதை கண்டதாகவும், அது உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மறுநாள் மீண்டும் அங்கு சென்று வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தகவலின் அடிப்படையில் போலீசார், தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்கு சென்று எலும்புக்கூடை ஆய்வு செய்தனர். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதாரங்களைத் தேடினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் , அந்த வீட்டில் கடந்த ஏழு ஆண்டுகளாக யாரும் வசிக்கவில்லை என்றும்வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு..!
முழு விவரங்களை அறிய, போலீசார் உடலை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாழாடைந்த அந்த வீடு யாருடையது? இறந்த நபர் எவ்வாறு இறந்தார்? யாராவது கொலை செய்யப்பட்டார்களா அல்லது இயற்கை மரணமடைந்தாரா? என்பது குறித்து விசாரிப்பதாக தெரிவித்தனர். தற்போது, போலீசாரின் கவனம் வீடியோ எடுத்த இளைஞர் மீது திரும்பியுள்ளது. எலும்புக்கூடு தொடர்பான ஆதாரங்களை விசாரணை செய்து விரைவில் உண்மை கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க: தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடித்து சிதறிய பாய்லர்.. பறிபோன 10 பேரின் உயிர்..!