சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே 66 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி கீழே தள்ளி போதையில் இளைஞர்கள் அவரின் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மூதாட்டி கத்தி கூச்சல் போட்டதால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே மூதாட்டியிடம் அத்துமீறிய இரண்டு பேரில் ஒருவரான ரவிக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிச்சென்ற மற்றொரு நபரை பிடிக்க போலீசார் முனைப்பு காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன என்றும் நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது புதுசா இருக்குண்ணே... “வடிவேலு பேச பேச திமுக அழிஞ்சி போகும்...” - அறிவாலயத்திற்கு சாபம் விட்ட அண்ணாமலை...!
எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது என்றும் ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது., கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றார். ஆனால், இதற்கு மேலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம் என்று அண்ணாமலை கூறியுள்ளார் .உடனடியாக, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் வீட்டிலிருந்து பத்து நிமிஷம் தான்..!! காரில் கடத்தி மாணவி வன்கொடுமை... கொந்தளித்த அண்ணாமலை..!!