தர்மஸ்தல மஞ்சுநாதர் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில். இங்க சாதாரண மக்களில் இருந்து அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்கிற ஆன்மீக தளமாக திகழ்கிறது. இப்படி பலரும் வந்து போற புனிதமான இடத்தில சாமி கும்பிட வர சிறுமிகள் இளம் பெண்களை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறதாகவும் பள்ளி சீருடையுடன் இருந்த 17 வயசு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஈவு இரக்கமே இல்லாமல் கொன்னிருக்கிறதாகவும் பல அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியான மர்ம முடிச்சுகள் வெளியே வர தொடங்கியிருக்கு.
100 இளம் பெண்கள், சிறுமிகள் கொன்று புதைப்பு:
நூற்றுக்கு மேற்பட்ட சிறுமிகள் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை பண்ணி துடிக்க துடிக்க கொலை செஞ்சு அவங்களை டீசல் ஊத்தி எரிக்க சொன்னாங்க. நானே என் கைகளால நிறைய பெண்களோட சடலங்களை எரிச்சிருக்கேன். சில பெண் சடலங்களை நிர்வாணமாகவே தர்மசலா கோயில் நிலத்தில புதைச்சிருக்கேன் அப்படின்னு ஒருத்தர் பலரையும் ஷாக்காக வைக்கிற மாதிரி வாக்கு மூலம் கொடுத்திருக்கார். இவரோட இந்த வாக்கு மூலம் கர்நாடக மாநிலம் மட்டுமில்லாம ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி இருக்குன்னுதான் சொல்லணும்.
இதையும் படிங்க: 40 நிமிடத்திற்கு அலறிய பயணிகள்... நடுவானில் வட்டமடித்த விமானம்... திக் திக் சம்பவம்...!
ஜூலை 11 ஆம் தேதி தர்மஸ்தலாவில் உள்ள பெல்தங்கடி வட்டத்தில் இருக்கக்கூடிய கோயிலுக்கு ஒரு நபரை வழக்கறிஞர்கள் புடைசூல கூப்பிட்டு வராங்க. அந்த நபரோட கை கால்கள் எதுவுமே தெரியாத மாதிரி உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரைக்கும் கருப்பு நிற துணியால கவர் பண்ணி அவர் பாக்குறதுக்காக கண்களுக்கு மட்டும் டிரான்ஸ்பரண்டான ஒரு ஓப்பனிங் கொடுத்து நீதிமன்றத்திற்கு கூப்பிட்டு வந்திருக்காங்க. அந்த நபர் யாரு அப்படிங்கறதுக்காக ஒரு ஐடி கார்ட் மட்டும் நீதிபதி கிட்ட ஒப்படைக்கப்படுது கூடவே அந்த நபர் கையில எடுத்து வந்த சில புகைப்படங்கள் அவர் ஏற்கனவே போலீஸ்ல கொடுத்த வாக்கு மூலமும் பகிர்ந்திருக்காங்க பல வருஷம் கட்டிக்காத்த மர்மமான விஷயங்களை வெளியே கொண்டு வந்த இந்த நபர் யார் என்கிற விஷயமும் தெரிய வந்து அதிர வச்சிருக்குது.
எந்நேரமும் பக்தர்கள் சூழ்ந்திருந்த கோவிலில் தற்போது மர்மங்கள் சூழ்ந்து கிடக்கிறது. பிரச்சனைக்கு தீர்வு தேடியும் பக்திக்கு அடிமையாகியும் கோவிலுக்கு சென்ற பெண்கள் மர்ம கும்பலுக்கு இறையாகி உயிரையே பறிகொடுத்த கொடூரம். சிவபெருமான் மஞ்சுநாதராக அருள் பாலிக்கிற இந்த கோயிலில் ஹிந்து வழக்கப்படி பூஜைகள் நடந்தாலும் சமண மதத்தை சேர்ந்தவங்களோட நிர்வாகத்தின் கீழ் தான் கோயில் இயங்கிட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு அன்னபூர்ணா என்ற சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருது. ஒரு தனியார் குடும்பத்துக்கு கீழ் இயங்குற இந்த கோயில்ல ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு எப்படி இலவசமா உணவு வழங்கப்படுதுன்னு கேள்வி எழுந்திருக்கு. தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறை மாதிரி கர்நாடகாவில் கிடையாது. அங்க இருக்கிற கோயில்கள் எல்லாம் தனியார் நபர்களோட கட்டுப்பாட்டில தான் இயங்கிட்டு இருக்கு. அதுபோலத்தான் தர்மசலா கோயில எக்டே குடும்பத்தினர் நிர்வகிச்சிட்டு இருக்காங்க.
தமிழ்நாட்டில முருகன் கோவிலுக்கு பொதுமக்கள் எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பாங்களோ?, அதுபோல கர்நாடக மக்கள் தர்மசலா மஞ்சுநாதர் கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு இருக்காங்க. சாதி மத பேதம் இல்லாத இந்த கோயில்ல பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தனித்தனி மடம் இருப்பதாகவும் சொல்லப்படுது. படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போகும் கர்நாடக இளைஞர்கள் தங்களோட முதல் மாச சம்பளத்துல 50 சதவீத்தை கோயிலுக்கு காணிக்கையா போட்டுருவாங்கன்னு கூறப்படுது. அதுமட்டுமில்லாம பெரிய பெரிய பணக்காரங்க வெளிநாட்டில உள்ளவங்க மாசாமாசம் பல கோடிகளை இந்த கோயிலுக்கு வாரி இறைச்சிருக்காங்க. அதனால இந்த கோயிலுக்கு எப்போதுமே பொருளாதார நெருக்கடி வந்ததே இல்லை. அதுபோல கர்நாடக அரசுக்கு அதிக லாபம் கொடுக்கிற கோயிலாவும் இந்த தர்மசலா இருந்திருக்கு. தினமும் மூணு வேலை சாப்பாடு போடுறத வேலை மக்கள் கூட்டமும் எந்நேரமும் அலைமோதிட்டுதான் இருக்குமா. இப்படி பல பேரோட பசிய போக்குல இந்த புண்ணிய ஸ்தலத்திலதான் இந்த ரண கொடூர சம்பவமும் அரங்கேறி இருக்கு.
பெத்தவங்க கிட்ட கணவன் கிட்ட சண்டை போட்டு கோயிலுக்கு மனநிம்மதியை தேடி போகிற பெண்களும் பக்தியை தேடி கோயிலுக்கு போகிற பெண்கள்தான் அதிக அளவு இந்த கும்பல் கிட்ட சிக்கி உயிரை பற கொடுத்திருக்காங்க. பள்ளிக்கு சென்ற 17 வயது மாணவி தர்மஸ்தாலா நிலத்திலிருந்து சடலமாக மீட்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமில்லாமல் கொலை செய்த பயங்கரம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளிவந்த பகீர் உண்மை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல் துறையினர் 2012 அக்டோபர் 9ஆம் தேதி வழக்கம் போல ஸ்கூலுக்கு போன 17 வயசான சௌஜன்யாங்கிற மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரல. மகளை பல இடங்கள்ல தேடி பார்த்தும் கிடைக்காததால போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க பெற்றோர். வழக்கு பதிவு பண்ண போலீஸ்காரங்க சௌஜன்யாவை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில இறங்கினப்போ தர்மசலா மஞ்சுநாதர் கோவிலுக்கு பக்கத்துல மாணவி ஒருத்தங்க பள்ளி சீருடையில அறை நிர்வாணமா கிடக்கிறதா போலீசுக்கு தகவல் வந்திருக்கு. அடுத்து சம்பவ இடத்துக்கு காவலர்கள் போய் பார்த்தப்ப சடலமா கடந்தது காணாம போனதா புகார் கொடுக்கப்பட்ட சௌஜன்யா அப்படிங்கிற மாணவிங்கிறது உறுதியாச்சு.
அதுக்கு பிறகு சடலத்தை மீட்டு போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வச்ச சில மணி நேரத்துல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்திருக்கு. அதுல சௌஜன்யாவை கொட்டூரமான முறையில பாலியல் வன்கொடுமை பண்ணி வெறித்தனமா அடிச்சு கொலை பண்ணி இருக்காங்கன்னு குறிப்பிடப்பட்டிருந்துச்சு. கோயில் நிலத்திலேயே சௌஜன்யா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமா மீட்கப்பட்டதால இந்த மர்டர் கேஸ் பெரிய அளவில் பேசு பொருளா மாறுச்சு. கர்நாடக மக்கள் மட்டுமில்லாம பல இடங்கள்ல இருக்கிற மக்கள் சௌஜன்யாவுக்கு நீதி கேட்டு போராட்டத்தில குதிச்சாங்க மாணவி சௌஜன்யாவை பாலியல் வன்கொடுமை பண்ணி கொலை பண்ணது யாருன்னு கண்டுபிடிக்க போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில இறங்கினாங்க அதுல தர்மசாலாவில யாசகம் எடுத்துட்டு இருந்தவர்தான் சௌஜன்யாவை பாலியல் வன்கொடுமை பண்ணி கொலை பண்ணதா போலீஸ் தரப்பில இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுச்சு. ஆனா அவர்தான் உண்மையான குற்றவாளிங்கறதுக்கான எந்த ஸ்ட்ராங்கான ஆதாரமும் போலீஸ் கிட்ட இல்லாததால யாசகம் எடுக்கிறவரு குற்றவாளி கிடையாதுன்னு நீதிமன்றம் தீர்ப்பளிச்சு. மாணவி சௌஜன்யாவை யாரு இப்படி பண்ணாங்க? சௌஜன்யாவுக்கு என்ன நடந்துச்சுங்கிறது இப்பவரை மர்ம புதிராவேதான் இருந்துச்சு.
25 ரூபாய்க்கு புதைக்கப்பட்ட சடலங்கள்:
இளம் பெண்கள் மாணவிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை. சந்தேகம் வராமல் இருப்பதற்காக தர்மஸ்தாலா கோவில் நிலத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள். 25 ரூபாய் சம்பளத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை கோவில் நிலத்தில் புதைத்த தூய்மை பணிகாளர். சடலங்களை கருப்பு நிற எஸ்யூவி காரில் கொண்டுவந்த நபர்கள் யார்? இதுக்கு மத்தியிலதான் இப்ப நீதிமன்றத்தில் ஆஜரான நபர் கொடுத்த புகைப்படங்களும் அவர் சொன்னதும் கர்நாடகாவையே கதி கலங்க வச்சிருக்கு. கோர்ட்ல ஆஜரான நபர் 1995ல இருந்து 2014 வரைக்கும் தர்மசாலாவில தூய்மை பணியாளரா வேலை பார்த்துட்டு இருந்த பீமா. வழக்கம் போல கோயில் வளாகத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்தப்ப நேத்ராவதி நதிக்கரைக்கு பக்கத்துல 505 என்ற நம்பர்ல கருப்பு நிற கலர்ல எஸ்யூவி கார் ஒன்னு வந்து நின்னுருக்கு. கார்ல இருந்து இறங்கின சிலர் வேலை பார்த்துட்டு இருந்த அந்த தூய்மை பணியாளரை கூப்பிட்டுருக்காங்க. அவரும் பக்கத்துல போய் என்னங்க ஐயான்னு கேட்க கார்ல இருந்து ரெண்டு மூணு இளம் பெண்கள் மாணவிகள் சடலத்தை இறக்கி இருக்காங்க. ஒவ்வொரு சடலத்தோட உடம்புலையும் மிக கொடூரமான முறையில ரண காயங்கள் இருந்திருக்கு. அதை பார்த்ததும் தூய்மை பணியாளர் ஒரு நிமிஷம் திகைச்சு போயிருக்கார். அப்போ கார்ல இருந்தவங்க சிலர் இந்த சடலங்களை எடுத்துட்டு போய் தர்மசாலா நிலத்தில புதைச்சிரு சில உடல்களை அந்த இடத்திலேயே டீசல் ஊத்தி கொளுத்திடு. அதுக்கு நாங்க உனக்கு மாசாமாசம் 25ரூபாய் சம்பளமா கொடுக்கிறோம்னு சொல்லி இருக்காங்க. குறிப்பா இந்த விஷயம் வெளியில வரக்கூடாதுன்னும் எச்சரிக்கையும் விட்டுருக்காங்க. 25 ரூபாங்கிறது அந்த காலகட்டத்தில பெரிய பெரிய வருமானமாய் இருந்ததால குடும்ப வறுமைக்காக சடலங்களை புதைக்கிறதுக்கும் எரிக்கிறதுக்கும் ஓகே சொல்லி இருக்காரு பீமா.
இப்படியே அடிக்கடி மாணவிகள் இளம்பெண்கள்னு நூற்றுக்கு மேற்பட்ட சடலங்களை 25ரூபாய் சம்பளத்துக்காக தர்மசலா நிலத்தில புதைச்சிருக்கார். இரவு நேரத்துல நேத்ராவதி நதிக்கரை கிட்ட கருப்பு கலர் எஸ்யூவி கார் வந்தாலே இன்னைக்கு ஒரு அசைன்மென்ட் இருக்கு அப்படின்னு தூய்மை பணியாளருக்கு தெரிஞ்சிடுமா. கார்ல வர்வங்க சடலங்களை கொடுத்து புதைக்க சொல்றது மட்டுமில்லாம எந்தெந்த சடலத்தை எங்க புதைக்கணும் எந்த திசையில குளி தோண்டணும்னு சொல்லுவாங்களாம். அவங்க சொன்ன மாதிரியே அந்த இடத்துல பீமா புதைச்சிருக்கார். இதுல என்ன ட்விஸ்ட்னா பீமாவுக்கு இளம்பெண்களும் மாணவிகளும் எப்படி உயிரிழந்தாங்க? அவங்க உடம்புல இருக்கிற ரண காயங்களுக்கு என்ன காரணம் கூற எந்த விஷயமும் தெரியாது. 25 சம்பளத்துக்காக மட்டும்தான் நூற்றுக்கும் அதிகமான சடலங்களை கோயில் நிலத்தில புதைச்சிருக்கார். சில பெண்களை நிர்வாணமாகவும் பள்ளி மாணவிகளை பேகோடவும் எரிச்சிருக்கார்.
அந்த மாணவி வேற யாரும் இல்ல. 2012ல பாலியல் வன்கொடுமை செஞ்சு கொலை செய்யப்பட்ட 17 வயசான சௌஜன்யாதான். [இசை] இதுக்கு நடுவுல 2014ல பீமா தர்மஸ்தலாவில வேலை பார்த்துட்டு இருந்தப்போ அவரோட குடும்பத்தை சேர்ந்த சிறுமியை தர்மஸ்தலா மேற்பார்வையாளர்கள் பாலியல் வன்கொடுமை செஞ்சு கொலை பண்ணி அவங்களோட சடலத்தையும் பீமா கிட்ட கொடுத்து கோயில் நிலத்திலேயே புதைக்க சொல்லி இருக்காங்க அப்போதான் தூய்மை பணியாளர் பீமாவுக்கு அந்த கும்பல் இளம்பெண்கள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை பண்ணது மட்டுமில்லாம அணு அணுவா சித்திரவத செஞ்சு கொலை பண்ணி இருக்காங்க அப்படிங்கிறது சொந்தக்கார பிள்ளையோட சடலத்தை பார்த்தப்பதான் தெரிய வந்திருக்கு. இந்த விஷயங்கள் தெரிஞ்சதுக்கு அப்புறமும் சடலங்களை புதைச்சா நாம் மனுஷ ஜென்மமே கிடையாதுன்னு முடிவு பண்ண பீமா 2014 டிசம்பர் 15ஆம் தேதி இரவோடு இரவா தர்மசலாவை விட்டுட்டு குடும்பத்தோட தப்பிச்சு போயிட்டார். அதுல இருந்து பீமாவுக்கு பல பேர் கிட்ட இருந்து கொலை மிரட்டல் வந்துட்டே இருந்ததா.
இந்த சம்பவங்கள் நடக்கும்போது பீமாவுக்கு 28 வயசு. இப்போ 54 வயசாகும். பல வருஷமா தர்மஸ்தலவை விட்டு தலைமறைவாக இருந்த பீமாவுக்கு இளம் பெண்கள் மாணவிகள்னு இப்படி பலரோட உயிரிழப்புக்கு நம்மளும் ஒரு காரணமா இருந்துட்டோமேன்னு மன உழைச்சல்ல இருந்த பீமா நடந்த சம்பவங்களை பத்தி கடிதமா எழுதி போலீஸுக்கு அனுப்புனதுலதான் இந்த விஷயம் பெரும் பிரளயமா வெடிச்சிருக்கு. [இசை] அடுத்து கோயில் நிலத்துக்கு வந்து பல இடங்கள்ல தோண்டி பார்த்தப்ப நிறைய பெண்களோட எலும்பு கூடுகள் கொத்து கொத்தா வந்திருக்கு. எல்லாத்தையும் கைப்பற்றின போலீசார் எலும்பு கூடுகளை ஆய்வுக்காக அனுப்பி வச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம நீதிமன்றத்தில் ஆஜரான பீமா சடலங்களை புதைச்சப்ப எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களையும் கொடுத்திருக்கார்.
மஞ்சுநாதர் கோவிலை நிர்வகித்து வரும் வீரேந்திர ஹெட்டே யார்?
பாஜக காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை கையில் வைத்துக்கொண்டு கர்நாடகாவில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டிளும் ஹெட்டே கொடூர கொலைகாளிகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவாரா?. 1948ல இருந்து 1968 வரை இந்த கோயிலை ரத்தினவர்மா ஹெக்டே தான் நிர்வகிச்சிட்டு இருந்தார். இவரோட மறைவுக்கு அப்புறம் இவரோட மூத்த மகன் வீரேந்திர ஹெக்டே தன்னோட 20 வயசிலேயே கோயிலோட மொத்த பொறுப்புகளையும் கையில் எடுத்திருக்கார். அதுமட்டுமில்லாம இந்த கோயில் ஒரு சின்ன கட்ட பஞ்சாயத்து மையமாகவும் இயங்கி வந்ததாக கூறப்படுது. இந்த கோயில் உள்ள மாநில முதலமைச்சருக்கே இல்லாத அதிகாரம் வீரேந்திர ஹெக்டேவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
வீரேந்திர ஹெக்டேவுக்கு ஆர்எஸ்எஸ், விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்கதல் கட்சி பிரமுகர்கள் நெருங்கிய நண்பர்களா இருந்திருக்காங்க. காங்கிரஸ்ல உள்ள முக்கிய பிரமுகர்களும் இவரோட நெருங்கிய தொடர்பிலேயே இருக்கிறதா சொல்லப்படுது. அதுமட்டுமில்லாம கர்நாடகாவில உள்ள அனைத்து சாதி தலைவர்களோட சப்போர்ட்டும் இவருக்கு இருந்திருக்கு. அதனாலேயே வீரேந்திர ஹெக்டே ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே கர்நாடகாவில நடத்திட்டு இருந்திருக்கார். வீரேந்திர ஹெக்டே என்ன செஞ்சாலும் அவரை யாருமே பகைச்சிக்கவே மாட்டாங்களாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இவருக்கு எதிரா அடிக்கடி போராட்டம் பண்ணிட்டு இருந்திருக்காங்க. ஆனா அதுவும் பெருசா எடுபடாம இருந்திருக்கு. வீரேந்திர ஹெக்டேவுக்கு மத்திய அரசோட பத்மபூஷன் விருது, மாநில அரசோட கர்நாடகா ரதினா விருது, ஸ்ரீ பகவான் மகாவீரர் அமைதி விருதுன்னு ஏகப்பட்ட விருதுகளும் வழங்கப்பட்டிருக்கு.
அதுமட்டுமில்லாம ராஜ்யசபா நியமன எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார். இவரோட குடும்பத்தினர் பேரில ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள்னு செயல்பட்டுட்டு இருக்கு. தர்மசலா கொடூர கொலை விவகாரம் அந்த கோயிலோட முன்னாள் தூய்மை பணியாளர் பீமா கொடுத்த வாக்கு மூலத்தால பூதாகரமா வெடிச்சிருக்கு. இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புறனாய்வு குழுவை அமைச்சிருக்காங்க. குழுவோட விசாரணை முடிவுல பெண்களை இந்த அளவுக்கு கொட்டூரமா கொலை பண்ணது யாரு? இதுக்கு யாரெல்லாம் உதவி பண்ணாங்க? இந்த சம்பவத்துக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் என்ன சம்பந்தம்ங்கிற எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கிறதோட இன்னும் பல மர்ம முடிச்சுகளும் அவரும்னு சொல்லப்படுது. இந்த கொடூர கொலை சம்பவங்கள் 1985ல இருந்து நடந்துட்டு இருக்கிறதாகவும் கர்நாடகாவில இதுவரை 4000 சிறுமிகள் இளம்பெண்கள் காணாமல் போயிருக்கதாகவும் சொல்லப்படுது. பீமா புதைச்ச பெண்கள் மட்டும் 100க்கு மேலன்னா காணாம போன மற்ற 390 பெண்கள் என்ன ஆனாங்கன்னு இப்ப வரைக்கும் தெரியாம மர்மமாகவே இருக்கு.
இதையும் படிங்க: சி.எம். பதவி என்ன கருணாநிதி குடும்ப சொத்தா?... திமுகவை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!