திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமி இவரது மகன் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார் இவரது சித்தப்பா தண்டபாணி 60, இவருக்கும் இவரது அண்ணனான முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமிக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கூலிப்படையினரால் காங்கேயம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த லிங்கசாமியை துண்டு துண்டாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார், இக்கொலைக்கான நேரடி சாட்சிகள் இல்லாததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் தனது தந்தையின் கொலைக்கு காரணமான தனது சித்தப்பாவை பழிக்குப் பலியாக சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி கொடுப்பேன் என சபதம் எடுத்த வழக்கறிஞர் முருகானந்தம் தனது பன்னிரண்டாம் வயதிலேயே வழக்கறிஞராக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்து தற்போது வழக்கறிஞராகவும் தொழில் செய்து வருகிறார். தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் தேன்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற தண்டபாணிக்கு சொந்தமான பள்ளியின் கட்டிடம் பள்ளிக் கல்வித் துறை அனுமதித்த அளவைவிட 4 மாடிகளில் கட்டப்பட்டு செயல்படுவதாகவும், இதனால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் என வழக்கறிஞர் முருகானந்தம் தனது சித்தப்பா மீது நீதிமன்றத்தில் தொடுத்தார்.
இந்த வழக்கின் காரணமாக பள்ளிக்கல்வித்துறை எடுத்த நடவடிக்கையின் படி தண்டபாணியின் பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்ட நான்காவது மாடி கட்டிடங்கள் கடந்த மாதம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பள்ளி செயல்பட்டு வரும் கட்டிடம் முழுவதுமே முறைகேடாக கட்டப்பட்டது என்றும் கட்டிடத்தில் உறுதித் தன்மை கேள்விக்குறியாக உள்ளது . எனவே இதை பரிசீலனை செய்து அப்பள்ளி கட்டிடத்தை முழுவதுமாக அகற்றி மாணவ மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என வழக்கறிஞர் முருகானந்தம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை மீண்டும் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தண்டபாணிக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி அருகே அரங்கேறிய பயங்கரம்.. மர்ம நபர்களால் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை..!
இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணி ஏற்கனவே தனக்கு பழக்கம் உள்ள கூலிப்படையினர் ஐந்து பேரை தயார் நிலையில் பள்ளி வளாகத்திலேயே வைத்திருந்ததாகவும், பள்ளியின் உறுதி தன்மையை பார்வையிட நீதிமன்ற ஊழியர்களுடன் தனது எதிரியான வழக்கறிஞர் முருகானந்தம் இன்று பள்ளிக்கு வருவார் என முன்கூட்டியே அறிந்திருந்த தண்டபாணி இன்று பகல் 2 மணி அளவில் கார் ஒன்றில் வந்த முருகானந்தம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை சார்ந்த ஊழியர்கள் மூன்று பேர் என நான்கு பேரும் நடந்து வந்து பள்ளியை வெளியில் இருந்தே பார்வையிட்டு திரும்பச் செல்ல முயன்ற போது தயாராக இருந்த கூலிப்படையினர் பின்புறமாக வந்து வழக்கறிஞர் முருகானந்தத்தை பின்புற தலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
இதனை பார்த்ததும் அலறி அடித்து ஓடிய உடன் வந்த நீதிமன்ற ஊழியர்கள் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்பே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் ஐந்து கூலிப்படையினர் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இடம் சரணடைந்து உள்ளதாகவும் வழக்கறிஞரை கொலை செய்ததற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்... அண்ணன், தம்பி வெட்டிக்கொலை...!