அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாக்கப்பட்ட என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும் ஒதுக்கப்பட்ட நிலையில், அமமுகவுக்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டன.
இந்த ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் 11 வேட்பாளர்களின் பட்டியலை சென்னையில் வெளியிட்டார். மடத்துக்குளம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சண்முகவேல், சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், திருச்சிராப்பள்ளி மேற்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், பெரியகுளம் (தனி) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமு போட்டியிட உள்ளனர்.

ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ், பூந்தமல்லி (தனி) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏழுமலை, மன்னார்குடியில் எஸ்.காமராஜ், திருவையாறுவில் வேலு கார்த்திகேயன், திருப்பத்தூரில் ஞானசேகரன், நாங்குநேரியில் இசக்கிமுத்து மற்றும் காரைக்குடியில் தேர்போகி பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: இபிஎஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ஏன்?... முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்...!
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குக்கர் சின்னத்தில் போட்டியிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!