தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சமீபத்தில் மதுரையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் முதல் விஜய் சுற்று பயணத்தை மேற்கொள்ளவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் பணியூர் அலுவலகத்தில் தற்பொழுது பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் முதற்கட்டமாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மாவட்ட செயலாளர்களுடன் தற்பொழுது ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக டெல்டா பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
விஜயின் சுற்றுப்பயணத்திறதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் சுற்றுப்பயணத்தின் போது அவர்களுடைய மாவட்ட பகுதிகளுக்கு வரும்போது மாவட்ட செயலாளர்கள் எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், மாவட்டங்களில் பிரச்சனைகள் மற்றும் தடைகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், தவெகவில் உருவாக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அணியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பொதுச் செயலாளர் ஆனந்த் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” - தவெகவை நோஸ்கட் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
மேலும் மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் பொது செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாநாட்டில் பக்கவாக முன் திட்டமிடல்கள் செய்யப்பட்ட போதும் தண்ணீர் தட்டுப்பாடு, தவெக தொண்டர்கள் சேர்களை உடைத்தது, பவுன்சர்களால் ராம்ப் வாக்கின் போது தொண்டர்கள் தூக்கிவீசப்பட்டது என அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கூட்டம் வரக்கூடாது என்பதற்காகவே விடுமுறை தினத்திற்கு பதிலாக வார நாளில் மாநாடு நடத்த தமிழக காவல்துறை அனுமதி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன்பே அதுதொடர்பான சாதக பாதகங்களை தவெக தலைமை தெளிவாக ஆராய்வதற்காக இந்த கூட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “சினிமா வேற, அரசியல் வேற...வார்த்தையைப் பார்த்து பேசுங்க”... விஜயை எச்சரித்த திருநாவுக்கரசர்...!