தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனை வரவேற்று அக்கட்சி நிர்வாகிகள் பேட்டியளித்தனர். தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைச் செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக்கழகம் எனும் கொள்கை கூட்டத்தில் முக்கியமான மாமனிதர் சேர்ந்திருக்கிறார் என்று செங்கோட்டையன் குறித்து புகழாரம் சூட்டினார். அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் என்றும் அவர் தங்கள் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய அருண் ராஜ், அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று என்று தெரிவித்தார்.

பெருமக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் மேலும் கடகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் பெற்ற ஒன்பது முறை எம்எல்ஏவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய மக்களின் அன்பையும் நம்பிக்கையும் பெற்ற செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதால் பெருமகிழ்ச்சி என்று தெரிவித்தார். மக்களுக்கு ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது என தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா செங்கோட்டையனை வரவேற்று பேசினார்.
இதையும் படிங்க: #BREAKING: 2026ல் விஜய் தான்…! தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உறுதி..!
அப்போது, வரலாறு திரும்புகிறது என்று கூறினார். செங்கோட்டையன் வாழ்வில் இரண்டு பெரிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறினார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விஜயை முதல்வராக செங்கோட்டையன் வரலாற்றை உருவாக்கும் முடிவு இன்று எடுத்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஊழல் இல்லாத நேர்மையான புதிய தமிழகத்தை உருவாக்க தங்களோடு செங்கோட்டையன் இணைந்து இருப்பதாகவும் அவரை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: தவெகவில் ஏன் இணைந்தேன்... உண்மையைப் போட்டு உடைத்து செங்கோட்டையன்...!