விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையேயான வாக்குவாதத்தில், ரம்யாவின் காலில் முனியப்பன் விழ வைக்கப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் நகராட்சி கூடாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
நகராட்சித் தலைவர் அறையில் பதிவான இந்த சிசிடிவி வீடியோ பொது வெளியில் கசிந்த நிலையில், `பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊழியரை கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்த தி.மு.க கவுன்சிலர் ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று 3 தி.மு.க கவுன்சிலர்கள், 2 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் ஒரு வி.சி.க கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷிடமும், நகராட்சி மேனேஜரிடமும் நேற்று புகாரளித்திருக்கின்றனர்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊழியரைக் கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இதுதான் திமுகவின் சமூக நீதி ஆட்சியா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: இனிமே நல்ல FUTURE இருக்கு! NDA கூட்டணியில் இருந்து விலகிய TTV... வாழ்த்துச் சொன்ன திருமா..!
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, திண்டிவனம் நகராட்சியில் நடந்திருக்கிற வன்கொடுமை சகித்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநிலை உதவியாளர் முனியப்பனை நகராட்சி அலுவலகத்திற்குள்ளேயே வந்து வெளியாட்கள் அச்சுறுத்தி இருக்கிறார்கள். இந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசுக்கு கலங்கம் விளைவிக்கக்கூடிய ஒரு அவலம். இது ஆகவே தமிழ்நாடு அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்... திருமாவளவன் குற்றச்சாட்டு..!