சென்னையில் இன்று அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. சென்னையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.
தமிழகத்தின் வடகிழக்கு பருவ மழை முழுமையாக விலகிய நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. சமீப நாட்களில் மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மழை தொடங்கி இருக்கிறது. இதனிடையே, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வானிலை எச்சரிக்கை..! சென்னை உட்பட 6 மாவட்டங்களில் கனமழை..! உஷார் மக்களே..!
மேலும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 27 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடை எடுத்துட்டு போங்க மக்களே..! ஏழு மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!