திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு, கோல்டன் நகர் அடுத்த கருணாகரபுரியில் உள்ள காலி இடத்தில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் அடிப்படையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாஅலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை சேர்ந்த பிரகாஷ் (19) என்பது தெரிய வந்தது. அவர் கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 5 பேர் மற்றும் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்த தருண் (19) என்பவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: ஜிம்கள் டார்கெட்.. ஒரு ஊசிதான்.. அர்னால்ட் ஆகலாம்! ஊக்கமருந்து கடத்திய 2 பேர் கைது..!

விசாரணையில் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். அப்போது கல்லூரிக்குள் இரண்டு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில் கோல்டன் நகரை சேர்ந்த மாணவர்கள் எதிர்தரப்பினருக்கு சாதகமாக பேசியுள்ளனர். கல்லூரியில் நடந்த இந்த சண்டை கோல்டன் நகர் பகுதி சண்டையாக மாறியது.

இதுகுறித்து பிரச்சனையில் கடந்த சில நாட்களாக இருதரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பிரகாஷ் கடந்த வாரம் நடந்த தகராறில் வாலிபர் ஒருவரின் மண்டையை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்கள் பிரகாஷ் தனியாக சிக்கும் போது அவரின் மண்டையை உடைக்க திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று இரவு கருணாகரபுரியில் பிரகாஷ் தனிமையில் சிக்கினார். அப்போது அந்த சிறுவர்கள் 5 பேர், தருண் ஆகியோர் சேர்ந்து கல்லால் பிரகாஷ் மண்டையை உடைத்துள்ளனர். அப்போது அது கொலையாக மாறியது. இதனால் நாம் போலீசில் சிக்கி விடுவோமோ என்று நினைத்து தலைமறைவாகினர். தொடர்ந்து தலைமறைவாய் இருந்த சிறுவர்கள் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்தனர். கல்லூரி பிரச்னை ஏரியா பிரச்னையாக உருவெடுத்த நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்ப்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தஒ ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தாய், தந்தை, மகன் கொலை.. வேகமெடுக்கும் சிபிசிஐடி விசாரணை.. பல்லடம் வழக்கில் பரபரப்பு..!