தாய்லாந்தில் பரபரப்பை கிளப்பியிருக்கும் செக்ஸ் ஊழல் விவகாரத்தில், 35 வயசு இளம்பெண்ணான விலவன் எம்சாவத், “மிஸ் கோல்ஃப்”னு அழைக்கப்படுறவள், புத்த மத துறவிகளை மிரட்டி ரூ. 100 கோடிக்கு மேல் பணம் பறிச்சதா கைது செய்யப்பட்டிருக்கா. இந்த விவகாரம், புத்த மதத்தின் புனிதத்தன்மையையும், துறவிகளோட ஒழுக்கத்தையும் கேள்விக்கு உட்படுத்தி, தாய்லாந்து மக்கள் மத்தியில பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கு.
விலவன் எம்சாவத், ஜூலை 15, 2025-ல் பாங்காக்குக்கு அருகே நோன்தாபுரியில் உள்ள தன்னோட ஆடம்பர வீட்டில் கைது செய்யப்பட்டாள். இவளுக்கு எதிரா பிளாக்மெயில், பணமோசடி, திருடப்பட்ட பொருட்களை வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கு. போலீஸ் இவள் வீட்டை சோதனையிட்டப்போ, 5 மொபைல் போன்களில் 80,000-க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் கிடைச்சிருக்கு.
இதுல பல முக்கிய துறவிகள், சிலர் ஆரஞ்சு உடையோடவே இருக்குற காட்சிகள் இருந்ததா சொல்றாங்க. இவள் குறைந்தது 9 அப்போட்கள் (கோவில் தலைமை துறவிகள்) உட்பட பல மூத்த துறவிகளோட உறவு வச்சு, அவங்களை இந்த வீடியோக்கள் மூலமா மிரட்டி, சுமார் 385 மில்லியன் பாட் (ரூ. 100 கோடிக்கு மேல்) பறிச்சிருக்கா.
இதையும் படிங்க: இப்படிலாமா போன்ல பேசுவீங்க! வெளியான பர்சனல் ஆடியோ! தாய்லாந்து பெண் பிரதமருக்கு பேச்சால் கொந்தளிப்பு!
இந்த பணத்தை இவள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு செலவழிச்சதா போலீஸ் கண்டுபிடிச்சிருக்கு. இந்த ஊழல் முதலில் ஜூன் 2025-ல வாட் ட்ரி தோட்ஸதேப் கோவிலோட அப்போட் திடீர்னு துறவறத்தை விட்டு ஓடி ஒளிஞ்சதால வெளிச்சத்துக்கு வந்தது. இவள் மிரட்டலுக்கு பயந்து ஒரு துறவி 180 மில்லியன் பாட் (ரூ. 42 கோடி) கொடுத்ததா தகவல் இருக்கு.

இதனால 9 அப்போட்கள் உட்பட பல துறவிகள் பதவியை இழந்து, துறவறத்துல இருந்து நீக்கப்பட்டாங்க. விலவனோட ஆடம்பர வாழ்க்கை, 6 மில்லியன் பாட் மதிப்புள்ள பென்ஸ் கார், 4 மில்லியன் பாட் மதிப்புள்ள வைர நகைகள் ஆகியவை இந்த பணத்தோட வந்ததுன்னு போலீஸ் சொல்றாங்க.
இவள் ஒரு கோல்ஃப் மைதானத்துல வேலை செய்து, “மிஸ் கோல்ஃப்”னு புனைப்பெயர் வாங்கினவள். இந்த பெயரை பயன்படுத்தி, உயர்க்குடி மக்களோட தொடர்பை வளர்த்து, துறவிகளை குறிவைச்சு மிரட்டியிருக்கா. தாய்லாந்தில் 90% மக்கள் புத்த மதத்தை பின்பற்றுறவங்க, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட துறவிகள் இருக்காங்க.
துறவிகள் செலிபசி கடைபிடிக்கணும், பெண்களை தொடக்கூடாதுன்னு கடுமையான விதிகள் இருக்கு. ஆனா, இந்த ஊழல், கோவில் நன்கொடைகளை துறவிகள் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றியதை வெளிப்படுத்தியிருக்கு. ஒரு மூத்த துறவிக்கு 50 மில்லியன் பாட் (ரூ. 11.5 கோடி) தனிப்பட்ட கணக்குல இருந்ததா ஒரு வழக்கறிஞர் சொல்லியிருக்கார். இது தாய்லாந்து சராசரி மாத சம்பளமான 16,000 பாட்டை விட பல மடங்கு அதிகம்.
இந்த விவகாரத்துக்கு பிறகு, தாய்லாந்து மன்னர் வஜ்ரலோங்கோர்ன், 81 துறவிகளுக்கு கொடுத்த அரச பட்டங்களை திரும்பப் பெற்றார். சங்க உயர் கவுன்சில், துறவிகளுக்கான ஒழுக்க விதிகளை மறுபரிசீலனை செய்ய கமிட்டி அமைக்கப் போகுது.
அரசு, கோவில் நிதிக்கு வெளிப்படைத்தன்மை கொண்டு வர புது விதிகள் தயாரிக்குது. இந்த ஊழல், புத்த மதத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தியிருக்கு. மக்கள் இப்போ கோவில்களுக்கு பதிலா பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு நன்கொடை கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. “துறவிகள் மீது நம்பிக்கை இழந்தாலும், புத்த மத போதனைகள் மீது நம்பிக்கையை இழக்க வேண்டாம்”னு தாய்லாந்து மக்கள் உருக்கமா தெரிவிச்சிருக்காங்க..
இதையும் படிங்க: அதிக உறுப்பினர் சேர்த்தா அடிக்குது பம்பர் பரிசு! பனையூரில் பக்கா ஸ்கெட்ச்.. விஜய் விறுவிறு!!