பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவ நிலைகள் மற்றும் வீடுகள் உள்ள இடங்களை குறிவைத்து டிரான்கள் மற்றும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவுகிறது. ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் 26 இடங்களில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவியது. அவை தரையை தொடும் முன்பே நமது பாதுகாப்பு படையினர் இடைமறித்து தாக்கி அழித்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் உரி, பூஞ்ச், குப்வாரா உள்ளிட்ட பகுதிகளில் பீரங்கிகள் மூலமாகவும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தானின் ட்ரோன்கள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவற்றை நடுவானிலேயே இடை மறித்து இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்து விடுகிறது. நமது வான் பரப்பை பாதுகாப்பதில் முக்கியமான 4 தூண்களாக இருப்பது, ஆகாஷ், ஸ்பைடர், பராக் 8, எம்ஆர்–எஸ்ஏஎம் ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகள்தான்.
இதையும் படிங்க: உலக அரங்கில் அசிங்கப்பட்ட பாக்., பீதியிலும் இந்தியாவை மிரட்ட ஷாபாஸின் அடுத்த தந்திரம்..!

இவற்றில் ரேடார், ஏவுகணைகள், விமானத்தை தாக்கும் துப்பாக்கிகள், கட்டுப்பாடு அமைப்புகள் உள்ளன. 24 மணிநேரமும் இவை செயல்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மூன்றாவது நாளாக ஜம்மு & காஷ்மீரில், பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து அதனை முறியடித்திருக்கிறது. ஜம்மு பகுதியில், கட்ரா, அதன் அருகில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில், தெற்கு காந்திநகர் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்திய ஏவுகணைகளால் மூன்று விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்திருந்தது.நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகிய 3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சர்கோதா விமான படைதளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த விமான படைத்தளங்களில் முதன்மையான நூர்கான் விமான தளம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெறும் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நூர் கான் விமானப்படைத் தளம் என்பது பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான ஏர் பேஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விமானப்படைத் தளமாக மட்டுமின்றி விஐபிகளின் விமான போக்குவரத்து மையமாகவும் இந்த ஏற்பேஸ் இருந்தது. இதேபோல் பாகிஸ்தானின் சக்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள முரிட் விமானப்படைத் தளமும் முக்கியமானது.

கடந்த இரண்டு நாட்களாக இங்கிருந்து தான் இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் டத்தி வருகிறது. ஷாபர்-1 மற்றும் பைரக்தர் TB2 போன்ற மேம்பட்ட ட்ரோன்களை இயக்கும் பல பாகிஸ்தான் விமானப்படை படைப்பிரிவுகள் இங்கு தான் உள்ளன. இதுவும் அழிக்கப்பட்டது. அடுத்ததாக ஷார்கேட் படைத்தளத்தில் JF-17 மற்றும் மிராஜ் போர் விமானங்களின் பல படைப்பிரிவுகள் இருந்தன. இவையும் தாக்கி அழிக்கப்பட்டது. தற்போது சர்கோதா விமான படைதளமும் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா மீது ஓயாமல் ட்ரோன் தாக்குதல்.. பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை துவம்சம் செய்து அழித்த இந்தியா!