ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று அதிகாலை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். தீவிரவாத இயக்கங்களின் தலைமை இடங்கள் தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 15 இந்தியர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாகிஸ்தான் நடத்தி வருவதால் இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் லாக்கூர் மற்றும் கராச்சி உள்ளிட்ட இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பதட்டமான சூழல் அங்கு நிலவுவதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் 2.0... சிதறும் பாகிஸ்தான்..! பழிதீர்க்க காத்திருக்கும் இந்தியா..!

ஏற்கனவே இஸ்ரேலில் போர்த் தாக்குதல் தொடங்கிய போதும் அமெரிக்கர்கள் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டது. தற்போது போர் என்று அறிவிக்கப்படாவிட்டாலும் இந்தியா-பாகிஸ்தானிடையே சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போர் பதற்ற ம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு நாடு திரும்ப வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு..! இந்திய ராணுவத்தின் தரமான சம்பவம்..!