பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பு இருந்தார்.  தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு நாளை மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலை தருவதாகவும் அரசின் தோல்விக்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்து இருந்தார்.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தத்துக் கொடுப்பதும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நன்கொடைக்காக கையேந்த வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கையேந்த வைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும் எனவும் அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

இதனிடையே, நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி திட்ட நன்கொடை தொடர்பான அன்புமணியின் புகாருக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் நன்கொடை வசூலிக் ஆசிரியர்கள் வற்புறுத்தல் என ஆதாரமற்ற புகாரை கூறி இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
இதையும் படிங்க: “வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்தால்”... ஸ்டாலினுக்கு எதிராக வன்னியர்களை கொம்பு சீவிவிடும் அன்புமணி...!
அரசு பள்ளி கட்டமைப்பு மேம்படுத்த தனியார் பங்களிப்பை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், தனிநபர் மூலம் திட்டத்தில் நிதிபெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சி அக்கறையுள்ளவர்கள் மீது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் முழு கவனம் உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியை சிதைக்கும் நோக்கிலான ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஒதுக்குவோம் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!