கே. அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அவரது தலைமையில், பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்று தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு முக்கியத்துவம் அளித்தது. அவரது ஆக்ரோஷமான அரசியல் பாணி, திமுக அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள், மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சிகள் ஆகியவை பாஜகவின் புலப்படுத்தலை அதிகரித்தன. 2024 மக்களவைத் தேர்தலில் கட்சியின் வாக்கு விழுக்காடு 18%ஐத் தாண்டியது அவரது தலைமையின் முக்கிய சாதனையாகக் கருதப்பட்டது.
இருப்பினும், எந்தவொரு தொகுதியிலும் வெளியிட முடியவில்லை என்பது கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது.2025 ஏப்ரல் மாதம், அண்ணாமலை தனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்த முடிவு, பாஜகவின் மத்திய தலைமையின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதாகவும், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அண்ணாமலையின் பதவி விலகலுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது, பாஜகவும் அதிமுகவும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை. 2023 ஆம் ஆண்டு, அண்ணாமலை, அதிமுகவின் முன்னாள் தலைவர்களான ஜெ. ஜெயலலிதா மற்றும் சி.என். அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்தது, இரு கட்சிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: என்ன ஆதாரம் இருக்கு? அண்ணாமலை கிட்ட விசாரிக்கணும்! உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!
இதனிடையே, அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தியாளரை அண்ணாமலை ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்துள்ளார். செய்தியாளரை மிரட்டும் தொனியில் பேசியதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். மாநில அளவிலான பாஜக இணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு வந்த போது கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கையாலாகாத காவல்துறை... அசிங்கப்படணும் முதல்வரே..! மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்...!