2013 ஆம் ஆண்டில், வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் ஒரு விசித்திரமான நோய் பரவியது. இது மில்லியன் கணக்கான கடல் நட்சத்திரங்களைக் கொன்றது. இப்போது மெக்சிகோவிலிருந்து அலாஸ்கா வரை பரவி வரும் மர்ம நோயால் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருகின்றன. அவற்றின் உடல்கள் சுக்குநூறாக உடைந்து, உறுப்புகள் உருகி கடலோடு கடலாக கரையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கடல் நட்சத்திரக் கழிவு நோய் என அழைக்கப்படும் இந்நோய்க்கான காரணத்தை 5 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு விஞ்ஞானிகள் இப்போது தான் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக கடல் வாழ் உயிரினங்களிடையே பரவக்கூடிய மர்ம நோய்க்கான காரணம் குறித்து கண்டறிய முடியாமல் சர்வதேச விஞ்ஞானிகள் திண்டாடி வந்தனர். கடைசி 5 ஆண்டுகளில் பல நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் குழு இரவு, பகல் பாராமல் நடத்திய ஆராய்ச்சிகளின் பலனாக இந்த நோய்க்கான காரணம் விப்ரியோ பெக்டெனிசிடா என்ற புதிய பாக்டீரியா என்பது தெரியவந்துள்ளது.
இந்த பாக்டீரியா வெதுவெதுப்பான நீரில் செழிப்பாக வளரக்கூடியது. மனித செயல்பாடு அல்லது புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால் , இந்த பாக்டீரியாக்களும் எளிதாக வளர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: நடக்கக்கூடாத பெருந்துயரம்... நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் ஸ்பார்ட் அவுட்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!
இந்த நோய் குறிப்பாக சூரியகாந்தி கடல் நட்சத்திரத்தை பாதிக்கிறது . இந்த கடல் நட்சத்திரம் உலகின் மிகப்பெரிய கடல் நட்சத்திரமாகும் , இது ஒரு சைக்கிள் டயரைப் போல பெரியதாகவும் 24 கைகளைக் கொண்டதாகவும் இருக்கும் . இது ஒரு வேட்டையாடும் உயிரினம் , இது கடலில் சமநிலையை பராமரிக்கிறது . ஆனால் , இந்த நோய் சுமார் 600 மில்லியன் சூரியகாந்தி கடல் நட்சத்திரங்களை அழித்துவிட்டது , இதன் காரணமாக இந்த இனம் இப்போது தீவிரமாக அழிந்து வருகிறது . காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை கடலில் பரவும் இந்த நோயை இன்னும் மோசமானதாக மாற்றக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லியில் முதல் முறையாக.. வரும் 24ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு.. தொடங்கி வைக்கிறார் அமித்ஷா..!