அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றிகரமாக நிறைவேறினால், இந்தியா ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவின் விதிக்கும் வரி தற்போதைய 50 சதவீதத்திலிருந்து 15-16 சதவீதமாக குறைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது இந்திய ஏற்றுமதியை பெரிதும் ஊக்குவிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி கொள்கையின் பின்னணியில் தொடங்கியது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 25-50 சதவீத வரி விதித்த டிரம்ப், வர்த்தக சமநிலை ஏற்படுத்துவதற்காக புதிய ஒப்பந்தங்களை வலியுறுத்தினார். இந்தியாவுடனான பேச்சுகள் ஐந்து சுற்றுகளுக்குப் பிறகு இப்போது வெற்றி பயணத்தை நோக்கி செல்கிறது.
இதையும் படிங்க: ரஷ்யாகிட்ட இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது..!! மறுபடியும் மறுபடியும் அடித்து சொல்லும் டிரம்ப்..!!
அக்டோபர் இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டின்போது இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான தொலைபேசி உரையாடல் இதற்கு வழிவகுத்தது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைப்பது அடங்கும். டிரம்ப் கூறுகையில், "மோடி ரஷ்ய எண்ணெய் வாங்குதலை வரம்புக்குள் வைத்திருப்பதாக உறுதியளித்தார்" என்றார்.
இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. எனர்ஜி மற்றும் விவசாய பொருட்களை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்காவின் சோளம் மற்றும் சோயாபவுடரை (Soymeal) இந்தியாவில் அனுமதிக்கும்.
முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயாபீன்ஸ் பவுடரை அனுமதிக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்தியா அதனை அனுமதிக்க மறுத்துவிட்டதால் தற்போதைய ஒப்பந்தத்தில் மரபணு மாற்றப்படாத சோளம், சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கும் பவுடரை நம் நாட்டின் மார்க்கெட்டில் விற்பனை செய்ய அமெரிக்காவுக்கு, இந்தியா அனுமதி வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் சோளம், சோயாபவுடர் இந்தியாவுக்கு வரும். இது அமெரிக்காவின் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்.
இந்த வரி குறைப்பு இந்தியாவின் ஜவுளி, இயந்திரப் பொருட்கள், மருந்து மற்றும் பொறியியல் துறைகளை பெரிதும் பயன்படுத்தும். தற்போது 50 சதவீத வரியால் இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்தையில் போட்டியிட முடியவில்லை. ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறைப்பு இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பை பாதிக்கலாம். மேலும், அமெரிக்காவின் புதிய வரி கொள்கை உலக வர்த்தகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தலாம் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இரு நாடுகளின் வணிக அமைச்சகங்களும் இதுவரை உத்தரவாதம் அளிக்கவில்லை, ஆனால் நிபுணர்கள் இது 2030க்குள் வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றால், இந்திய பொருளாதாரத்துக்கு புதிய உற்சாகம் ஏற்படும். டிரம்ப்-மோடி சந்திப்பு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை உறுதிப்படுத்தும்.
இதையும் படிங்க: ஹூண்டாய் நிறுவனத்தின் ROAD MAP வெளியானது..!! அடுத்த 5 ஆண்டுகளில் 26 கார் மாடல்கள்..!!