பீகாரின் அரசியல் வரலாற்றில் 2025 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியத்துவமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டன. 7.45 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்தல், 1951 முதல் பீகாரின் அதிக வாக்காளர் பங்கேட்பை (67.13%) பதிவு செய்தது.
ஆனால், இந்த உற்சாகமான பங்கேட்புக்கு மாறாக, காங்கிரஸ் கட்சி தனது எதிர்பார்ப்புகளைத் தாண்டி பெரும் பின்னடைவை சந்தித்தது. 2020 தேர்தலில் 19 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், இம்முறை வெறும் 2 முதல் 7 இடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது, இது கட்சியின் அரசியல் செல்வாக்கின் சரிவை வெளிப்படுத்துகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், பீகாரின் முதலமைச்சராக 10வது முறையாக இன்று நிதிஷ்குமார் பதவி ஏற்று உள்ளார். பெரும்பான்மையை நிரூபித்து உள்ளதால் அமைச்சரவையில் அதிக இடங்களை பாஜக பெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி முதலமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பீகார் முதல்வராக நிதீஷ் குமார் நாளை பதவி ஏற்பு… பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு…!
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார். தொடர்ந்து துணை முதலமைச்சர் ஆக பாஜகவின் விஜய் சின்ஹா பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றவர்களுக்கு பிரதமர் மோடி கைக்குலுக்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: பீகார் தேர்தலில் படுதோல்வி… தானே 100% பொறுப்பு.. பிரசாந்த் கிஷோர் வேதனை…!