குஜராத் மாநிலத்துக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், “ காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே, பாஜகவுக்கு வேலை செய்யும் நிர்வாகிகள், தலைவர்கள், தொண்டர்களை வடிகட்ட வேண்டியது அவசியம், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும், தேவைப்பட்டால் கட்டியியிலிருந்து நீக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு பாஜகவுக்கு ஆத்திரத்தை கொடுத்ததால் அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சுதான்சு திரிவேதி நேற்று கூறுகையில் “ காங்கிரஸ் கட்சிக்குள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வந்ததில் இருந்து அந்தக் கட்சியின் நிலைமை மோசமாகி வருகிறது. 140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் தோல்வி அடைந்த தலைவராக இருக்கும் ராகுல் காந்தி,குஜராத்தில் தொண்டர்களிடம் வெற்றியின் ரகசியம் குறித்து கூட்டம் நடத்துகிறார். இது அந்தக்கட்சியின் உள்கட்சி விவகாரமாக இருந்தாலும், ராகுல் காந்தியின் கருத்துக்கள், காங்கிரஸ் கட்சியில் பிரச்சினை இருப்பதாகவும், அவரின் மனநிலை சரியில்லை என்பதைக் காட்டுகிறது.

அரசியலமைப்புச் சட்ட அமைப்புகள், மத்திய அரசு, மாநில அரசுகள், ஊடகங்களைக் குறைகூறியராகுல் காந்தி, தற்போது சொந்தக் கட்சியினரையே குறைகூறத் தொடங்கிவிட்டார். தங்கள் சொந்தக் கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வெளிப்படையாக விமர்சிக்கும், அவமானப்படுத்தும் மோசமானத் தலைவரை எங்கும் பார்த்திருக்கமாட்டீர்கள். ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்தால், கட்சியின் மோசமான தலைவராக இருக்கிறோம் என்பதை உணர்வார்” எனத் தெரிவித்தார். பாஜகவின் மற்றொது தேசிய செய்தி்த்தொடர்பாளர் ஷெசாத் பூனாவல்லா கூறுகையில் “ ராகுல் காந்தி தன்னைதானே ட்ரோல் செய்கிறார், தனது கட்சியையும் ட்ரோல் செய்கிறார்.
இதையும் படிங்க: போர்ட்டர்களை நேரில் சந்தித்த ராகுல் நெகழ்ச்சி; இருளில் பிரகாசிக்கும் மனிதநேய ஒளி
கட்சியின் தோல்விகளுக்கு தொண்டர்களையும், தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயையும் குறை சொல்கிறார் ராகுல் காந்தி. பாஜகவுடன் பாதிக்குமேற்பட்ட தலைவர்கள் கூட்டு வைத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார். 90க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தனது கட்சியை தோற்கடித்தபோது, தனது கட்சித் தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்ததாக அவர் கூறினார். இந்த வகையில், அவர் பாஜகவின் மிகப்பெரிய சொத்து.

ராகுல் காந்தி முதலில் தன்னை மதிப்பிட்டுக்கொண்டு உணர்ந்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்கு எந்திரம், தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல், கட்சி தொண்டர்கள், மக்களை குறைகூறுவதைவிடுத்து, ஏன் கட்சியில் இன்னும் செயல்படா சொத்தாக இருக்கிறோம் என்று அவர் உணர வேண்டும். தேர்தலில் காங்கிரஸ் தோற்றது என்பது ஒரு கலை என்றால் அதில் கலைஞராகஇருந்தது ராகுல் காந்தி. குதிரைகள் ஓடும்திறனை இழந்துவிட்டால் திருமண நிகழ்ச்சிகளுக்கு மாப்பிள்ளை அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும். கார்கே தலைவராக கட்சிக்கு இருக்கிறார், ஆனால் ராகுல் காந்திதான் தலைவராகச் செயல்படுகிறார்.

மல்லிகார்ஜூன கார்கேவை அவமானப்படுத்துவதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும். குஜராத் காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைக்கும், தேசிய அளவிலும் கட்சியின் மோசமான நிலைமைக்கும் ராகுல் காந்தியும், அவர்களின் குடும்பத்தாரும் எவ்வளவு பொறுப்பு என்பதை உணர வேண்டும்.
உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதன் மூலம் நேரு காந்தி குடும்பத்தினர் தலைவர்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும். இவ்வாறு திரிவேதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு அவமானம்" - ராகுல் காந்தி பாய்ச்சல்