இன்று தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். இது வழக்கமான முழு பட்ஜெட் இல்லை, ஏனென்றால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய அரசு குறுகிய கால செலவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனை மிகவும் தீவிரமாக கருதி வருகிறது. அந்த வகையில், நிதி அமைச்சரும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்காக இந்த ஆண்டு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதன் மூலம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளதாக கூறினார். இது தமிழக அரசின் சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியின் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.இந்த ஒதுக்கீட்டின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதையும் படிங்க: பட்ஜெட் பெயரில் காது குத்தும் விழா...! பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக..!
உதாரணமாக, அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், மருத்துவ உதவிகள், கல்வி உதவித்தொகைகள், வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகள் மற்றும் சிறப்பு வாகனங்கள் போன்றவை வழங்கப்படும். ஏற்கனவே திருமண நிதியுதவி, இலவச பயண சலுகைகள், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். இப்போது இந்த பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருப்பதால், இன்னும் அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகள் நேரடியாக பயன்பெற வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: வரும் பிப். 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! உற்றுநோக்கும் அரசியல் கட்சிகள்... சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!