காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பெண்களின் கண் முன்னே அவர்களின் கணவர்களை சுட்டுக் கொன்றனர். இதில் 26 பேர் பலியாயினர்.பெண்களின் கண்ணெதிரிலேயே கணவன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்துார் என்ற ராணுவ நடவடிக்கையை நம் நாடு நேற்று முன்தினம் துவங்கியது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் நிர்மூலமாக்கியது. அதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவிலுள்ள பொது மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் இந்தியாவில் உள்ள மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக எல்லை பகுதிகளில் உள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: ஏவுகணை வீசித்தான் அடிக்க முடியல..? செருப்பாலாவது அடிப்போம்... பாக்., பிரதமர் படத்தை பதம் பார்த்த பாஜகவினர்..!
காஷ்மீர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய இரு ராணுவத்திற்கும் இடையிலான சண்டை விடிய விடிய நடந்துள்ளது. இரு தரப்பிலும் துப்பாக்கி சூடுகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா நோக்கி வந்த மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. முக்கியமாக F-16 ரக போர் விமானம் ஒன்றையும் இந்தியா சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இது பாகிஸ்தான் வசம் இருக்கும் சக்தி வாய்ந்த போர் விமானங்களுள் ஒன்று.

ஆப்கன் ஆபரேஷனில் அமெரிக்காவுக்கு உதவியதற்காக பாகிஸ்தானுக்கு இந்த போர் விமானங்களை அமெரிக்கா கொடுத்தது. அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்பது அமெரிக்காவின் கண்டிஷன். அதையும் மீறி இப்போது பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் என 3 மாநிலங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் போர் விமானங்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இவை இல்லாமல் 50 ட்ரோன்களையும் இந்தியா மேல் ஏவி விட்டது. எல்லா ட்ரோன்களையும் இந்தியா தவிடுபொடியாக்கி விட்டது.

இந்தியாவின் இந்த பதிலடி பாகிஸ்தானை நடுக்க செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடுக்கம் அவர்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில், அந்நாட்டு எம்.பி ஒருவர், “நாங்கள் தவறு செய்துவிட்டோம், கடவுளே எங்களுக்கு கருணை காட்டு“ என கதறி அழுத வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் அவர், “அல்லாஹ் நம்மை காப்பார்.. உலகில் எங்கு பார்த்தாலும் நாம் பின்தங்கி இருக்கிறோம், நாங்கள் தவறு செய்துவிட்டோம், ஆனால் கடவுளே நாங்கள் உங்களின் ஆதரவாளர்கள்.. கடவுளே எங்கள் மீது கருணை காட்டு எனக் கூறி கதறி அழுதார்.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் எம்.பி. ஜாவித் அக்தர் கான், தனது சொந்த பிரதமரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை "உச்சரிக்க" பயப்படும் "கோழை" என்று அழைத்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் ஜாவித் அக்தர் கான் பேசியதாவது, இந்தியாவுக்கு எதிராக ஒரு அறிக்கை கூட வரவில்லை. எல்லையில் நிற்கும் பாகிஸ்தான் வீரர்கள் அரசாங்கம் துணிச்சலுடன் போராடும் என்று எதிர்பார்க்கிறார்கள். உங்கள் தலைவர் மோடியின் பெயரைக் கூட உச்சரிக்க முடியாத ஒரு கோழையாக இருக்கும்போது, எல்லையில் போராடும் ராணுவ வீரருக்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்கிறீர்கள்?

மோடியை ஒரு ஷெர் (சிங்கம்) என்று புகழ்ந்து பேசிய அவர், கடினமான காலங்களில் வலிமையும் தெளிவும் இல்லாததற்காக பாகிஸ்தானின் பிரதமரை சாடினார்.

பாகிஸ்தான் ராணுவம் கூட மனச்சோர்வடைந்துள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தினார். இது பாகிஸ்தானின் அரசியல் வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் விரக்தியைக் வெளிக்காட்டுகிறது. இந்தத் துணிச்சலான தாக்குதல் சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானின் தலைமை மற்றும் பாதுகாப்பு நிலைப்பாடு குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்..? தமிழகத்தில் இருந்து யாருக்கு அமைச்சர் பதவி..?