சிபிஎஸ்இ (CBSE) 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், காலை எப்போது வெளியாகும் என்று தெளிவான நேரம் குறித்து தகவல் இல்லை. கடந்த ஆண்டுப்படி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 13ம் தேதிக்குள் வெளியாகியுள்ளன. அதன்படி பார்த்தால் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சிபிஎஸ்இ அதிகாரபூர்வ இணையதளம் இன்னும் திறக்கப்படவில்லை. சிபிஎஸ்இ கல்வி வாரியம் இன்னும் தேர்வு முடிவுகளை தங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்கலாம் என்பதால்தான் தேர்வு முடிவுகள் குறித்து தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. மாணவர்களும் , பெற்றோர்களும் தொடர்ந்து சிபிஎஸ்இ அதிகாரபூர்வ இணையதளத்தின் அப்டேட்ஸை தொடர்ந்து கண்காணிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு தொடக்கம்.. எப்போது வெளியாகும் சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்?
இந்த ஆண்டு தேசிய அளவில் 44 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதில் 24.12 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு படிப்பவர்கள், 17.88 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கடந்த பிப்ரவரி 15 முதல் 18ம் தேதி வரையிலும்,12ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4ம் தேதிவரையிலும் தேசிய அளவில் 7842 மையங்களிலும் வெளிநாடுகளில் 26 மையங்களிலும் நடந்தது.

இந்த ஆண்டும் சிபிஎஸ்இ நிர்வாகம் முதலிடம் பெற்ற மாணவர்கள் குறித்து வெளியிடாது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம மட்டுமே வெளியாகும்.மாணவர்களுக்கிடையே ஆரோக்கியமான கல்வி சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தாழ்வுமனப்பானமையை போக்கவும், நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்த முறை இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்கள் பாடவாரியாக மதிப்பெண்களும், கிரேடு முறை கொண்ட மதிப்பெண் சான்று மட்டுமே பெறுவார்கள்.

10, 12 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
1. சிபிஎஸ்இ அதிகாரபூர்வ cbse.gov.in. தளத்துக்கு செல்ல வேண்டும்
2. ரிசல்ட்ஸ் பகுதியை கிளிக் செய்ய வேண்டும்
3. புதிய விண்டோ திறக்கப்படும்
4. அதில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு முடிவுகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தேவையானதை கிளிக் செய்யலாம்.
5. புதிய விண்டோ திறக்கப்படும், அதில் கேட்கப்படும் விவரங்கள் மாணவரின் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு சப்மிட் செய்ய வேண்டும்.
6. புதிய திரையில் 10 அல்லது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மதிப்பெண் சான்று வெளியாகும்.
7. தேர்வு முடிவு, மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்
8. சிபிஎஸ்இ 6இலக்க டிஜிட்டல் அக்சஸ் எண்களை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிலாக்கர் மூலம் பள்ளி நிர்வாகம் மாணவர்களுடன் இணைந்து மதிப்பெண் சான்றிதழை எளிதாகப் பெற முடியும். இதன்படி மாணவர்கள் டிஜிலாக்கர் மூலம் தங்களின் டிஜிட்டல் மதிப்பெண் சான்று, இடப்பெயர்வு சான்று உள்ளிட்டவற்றைப் பெறலாம்.

டிஜிலாக்கர் வாயிலாக எவ்வாறு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது?
1. மொபைல் போனில் டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. அதை லாக்கின் செய்ய வேண்டும்.
3. பயனாளியின் 10 அல்லது 12ம் வகுப்பு தேர்வினை தேர்வு செய்ய வேண்டும்.
4. பள்ளியின் பெயர், மாணவரின் பதிவு எண், 6 இலக்க எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
5. நெக்ஸ்ட் பட்டனை அழுத்தினால், ஓடிபி மொபைல் எண்ணுக்கு வரும். அதை பதிவு செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
6. டிஜிலாக்கர் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
இதையும் படிங்க: இனி கம்மி மார்க் எடுத்தால் ஃபெயிலா? சிபிஎஸ்இ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயினார் நாகேந்திரன்!!