அமெரிக்காவின் பாஸ்டன்ல உள்ள கில்லெட் ஸ்டேடியத்துல ஜூலை 16-ஆம் தேதி நடந்த கோல்ட்பிளே இசை நிகழ்ச்சி, ஒரு டெக் கம்பெனி CEO-வோட வாழ்க்கையை தலைகீழா மாத்திருக்கு. ஆஸ்ட்ரோனமர் என்ற டேட்டா மேனேஜ்மென்ட் கம்பெனியோட CEO ஆண்டி பைரன், அவர் கம்பெனியோட HR தலைவி கிறிஸ்டின் கேபாட்டோட கோல்ட்பிளே கச்சேரிக்கு போயிருக்கார். ஆனா, அங்க “கிஸ் கேம்”னு ஒரு ஜாலி சமாச்சாரத்துல சிக்கி, இப்போ இணையத்துலயே பயங்கர வைரலாகியிருக்காங்க!
கோல்ட்பிளே, கிறிஸ் மார்ட்டின் தலைமையிலான உலகப் புகழ் பெற்ற ராக் பேண்ட், இப்போ “Music of the Spheres” உலக டூர்ல இருக்கு. இந்த நிகழ்ச்சி, பாஸ்டன்ல 65,000 பேர் உக்காரக்கூடிய கில்லெட் ஸ்டேடியத்துல நடந்தது.
பாட்டு, லைட்ஸ், ஃபயர் ஒர்க்ஸ் எல்லாம் கலந்து, கோல்ட்பிளே நிகழ்ச்சி எப்பவும் ஒரு பிரமாண்ட விருந்து. ஆனா, இந்த முறை, இந்த கச்சேரியோட “கிஸ் கேம்” பகுதி தான் ஹைலைட்டா மாறிடுச்சு!
இதையும் படிங்க: பேச்சுவார்த்தைக்கு நாங்க தயார் தான்!! ஆனா.. கண்டிஷன் போடும் புதின்.. கலக்கத்தில் உக்ரைன்!!
இது ஒரு ஸ்டேடியம் ட்ரெடிஷன். கச்சேரி இல்லைனா விளையாட்டு நிகழ்ச்சிகள்ல, ஜம்போட்ரான் (பெரிய ஸ்க்ரீன்) கேமராவை கூட்டத்துல இருக்கற ஜோடிகள் மேல பாய்ச்சுவாங்க. கேமரா யாரை காட்டுதோ, அவங்க முத்தம் கொடுக்கணும், கூட்டமும் கத்தி ஆர்ப்பரிக்கும்.

இது ஒரு ஜாலி மொமென்ட்டா இருக்கும், ஆனா சில சமயம்... இப்படி ட்ராமாவாகிடும்!என்ன நடந்தது?: ஆண்டி பைரன், கிறிஸ்டின் கேபாட்டை பின்னால இருந்து கட்டிப்பிடிச்சு, ரொம்ப கோஸியா இருந்தப்போ, கிஸ் கேமரா அவங்களை ஜூம் பண்ணிருக்கு.
கிறிஸ் மார்ட்டின், “ஓ, இந்த ரெண்டு பேரை பாருங்க!”னு கூவ, அவங்க ரெண்டு பேரும் ஷாக் ஆகி, பைரன் குனிஞ்சு மறைஞ்சு, கேபாட் முகத்தை மூடிக்கிட்டாங்க. மார்ட்டின் நகைச்சுவையா, “இவங்க அஃபேர் பண்ணுறாங்களா, இல்ல ரொம்ப வெக்கப்படறாங்களா?”னு கேட்டு, கூட்டத்தை சிரிக்க வெச்சுட்டார். ஆனா, இந்த வீடியோவை ஒரு ரசிகை, கிரேஸ் ஸ்ப்ரிங்கர், டிக்டாக்ல போட்டு, 30 மில்லியன் வியூஸ் எடுத்து, இணையம் புலம்ப ஆரம்பிச்சிருக்கு!
ஆண்டி பைரன், மேகன் கெர்ரிகன் பைரன் என்பவர் கூட ஆல்ரெஇ கல்யாணம் ஆனவர். ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. இந்த வீடியோ வைரலானதும், மேகன் தன்னோட ஃபேஸ்புக் ப்ரொஃபைல்ல இருந்து “பைரன்” பெயரை எடுத்துட்டு, பிறகு அக்கவுண்டையே டெலீட் பண்ணிட்டாங்க. கிறிஸ்டின் கேபாட், முன்னாள் கணவர் கென்னத் தோர்ன்பியை விவாகரத்து பண்ணவர், இப்போ தனியா இருக்கற மாதிரி தெரியுது. ஆனா, இவங்க ரெண்டு பேரும் ஒரு கம்பெனியோட CEO, HR தலைவரா இருக்கறதால, இந்த “கோஸி” மொமென்ட், ஆஃபீஸ் கல்ச்சரை கேள்விக்கு உட்படுத்தியிருக்கு.
இந்த சம்பவத்துக்கு அப்புறம், ஆஸ்ட்ரோனமர் கம்பெனி, பைரனையும் கேபாட்டையும் விடுப்புல அனுப்பி, ஒரு விசாரணையை ஆரம்பிச்சது. ஆனா, ஜூலை 20-ஆம் தேதி, பைரன் தன்னோட CEO பதவியை ராஜினாமா பண்ணிட்டார். கம்பெனி, “எங்க தலைவர்கள் எப்பவும் உயர்ந்த நடத்தை தரத்தை பின்பற்றணும்”னு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருக்கு. இப்போ, இன்டரிம் CEO-வா பீட் டி ஜாய் நியமிக்கப்பட்டிருக்கார்.
சமூக வலைதளங்கள்ல, “கோல்ட்பிளே கச்சேரிக்கு போனா வேலை போச்சு!”னு மீம்ஸ் பறக்குது. கிறிஸ் மார்ட்டினோட ஒரு ஜோக், ஒரு CEO-வோட கரியரையே முடிச்சிருக்கு!
இதையும் படிங்க: மார்க்கெட் உச்சத்துல இருக்க நான்தான் காரணம்!! வம்பிழுக்கும் வால் ஸ்ட்ரீட் - பெருமை பீத்தும் ட்ரம்ப்..!