சீனாவோட தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்க்குது. இந்த இடைவிடாத மழையால, மியுன், யாங்கிங் மாகாணங்களில் பயங்கரமான நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு, மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகியிருக்காங்க. ஒரே இரவில் 543 மி.மீ மழை பெய்து, பீஜிங்கோட ஆண்டு சராசரி மழையை (600 மி.மீ) கிட்டத்தட்ட எட்டிடுச்சு.
இதனால, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து, கார்கள், மரங்கள், மின்கம்பங்கள் எல்லாம் அடிச்சுப் போயிருக்கு. கிராமங்களில் வீடுகள் இடிஞ்சு, சாலைகள் தகர்ந்து, மக்கள் வாழ்க்கை திண்டாடுது.மியுன் மாகாணத்தில், 28 பேர் வெள்ளத்துல உயிரிழந்திருக்காங்க.
யாங்கிங் மாகாணத்தில் 2 பேர் பலியாகியிருக்காங்க. அருகில் உள்ள ஹெபாய் மாகாணத்தின் லுவான்பிங் கவுண்டியில், நிலச்சரிவுல 4 பேர் கொல்லப்பட்டு, 8 பேரை காணோம்னு CCTV செய்தி சொல்லுது. இதுவரை மொத்தம் 34 பேர் இந்த மழை, வெள்ளத்துல உயிரிழந்திருக்காங்க. மியுன் மாகாணத்தில் உள்ள மியுன் அணையில் நீர் மட்டம் ஆபத்து அளவைத் தொட்டதால, தண்ணீர் திறக்கப்பட்டிருக்கு.
இதையும் படிங்க: ரூ.4,850 கோடி கடன்.. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் மாலத்தீவு.! கழட்டி விடப்பட்ட சீனா!!
இதனால, கரையோரப் பகுதிகளில் இருக்குற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்காங்க. மொத்தமா 80,000 பேர் பீஜிங்கில் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்காங்க, இதுல 17,000 பேர் மியுன் மாகாணத்தைச் சேர்ந்தவங்க.
இந்த வெள்ளத்துல, மியுன் மாகாணத்தின் தைஷிதுன், சினான்சுவாங் கிராமங்களில் வீடுகள், கடைகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக அடிச்சுப் போயிருக்கு. ஒரு பெண், “நான் பிறந்து வளர்ந்த ஊர் ஒரே இரவுல அழிஞ்சு போச்சு. இப்படி ஒரு பயங்கரமான வெள்ளத்தை பீஜிங்கில் பார்த்ததே இல்லை”னு சியோஹாங்ஷு (சீனாவோட இன்ஸ்டாகிராம்) தளத்தில் பதிவு செய்திருக்காங்க.

ஹெபாயில் உள்ள யாங்ஜியாட்டை கிராமத்தில் ஒரு பெண், “எங்க ஊரில் வீடுகள் இடிஞ்சு, மின்சாரம், தொலைபேசி இணைப்பு எல்லாம் துண்டிக்கப்பட்டிருக்கு. நாங்க வெளியேறி உதவி கேட்டு இருக்கோம்”னு CNN-க்கு சொல்லியிருக்காங்க.
பீஜிங் அரசு, திங்கட்கிழமை (ஜூலை 28) இரவு 8 மணிக்கு உயர் மட்ட வெள்ள எச்சரிக்கை (Red Alert) விடுத்து, பள்ளிகள், கட்டுமானப் பணிகள், சுற்றுலாத் தலங்களை மூடியிருக்கு. 136 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கு, 10,000 பேருக்கு மேல பவர் கட் ஆகியிருக்கு. மீட்பு பணிகளுக்கு 50 மில்லியன் யுவான் (சுமார் 7 மில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டிருக்கு. சீன பிரதமர் லி கியாங், “மியுனில் ஏற்பட்ட பயங்கர இழப்புக்கு மீட்பு பணிகளை தீவிரப்படுத்துங்க”னு உத்தரவு போட்டிருக்கார்.
சீன வானிலை ஆய்வு மையம், “இன்னும் மூணு நாளைக்கு கனமழை தொடரும்”னு எச்சரிச்சிருக்கு. இந்த மழையை, காலநிலை மாற்றத்தால வந்த பேரிடர்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. கிழக்கு ஆசிய மான்ஸூன் மழை, வழக்கத்தை விட அதிகமா பெய்யுது.
இது வட சீனாவின் பொருளாதாரத்தையும், மக்கள் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கு. மியுனில் ஒரு இளம் பெண், “எங்க குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியல. முதியவர்கள், குழந்தைகள் வீட்டுல மாட்டிக்கிட்டாங்க”னு புலம்புறாங்க. இந்த சோகமான நிலைமை, மக்களோட மனசை உலுக்குது, மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தாலும், இயற்கையோட பேராற்றலை எதிர்கொள்ள மக்கள் திணறுறாங்க.
இதையும் படிங்க: பாக்., சீனாவை சுளுக்கெடுத்த போர் வீரன்.. 60 ஆண்டு சகாப்தத்திற்கு ஓய்வு கொடுத்தது இந்தியா!!