பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களான இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி ஆகியவற்றின் மீது இன்று அதிகாலை குண்டுவீசி இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராவல்பிண்டியில் இரு இடங்களிலும், லாகூர், இஸ்லாமாபாத் நகரில் தலா ஒரு இடத்திலும் தாக்குதல் நடத்தியது இந்திய ராணவம். அது மட்டுமல்லாமல் ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானத் தளம், பஞ்சாப் ஷார்கோட்டில் உள்ள ராபிக் விமானத்தளம், பஞ்சாப் சக்வாலில் முரித் விமானத்தளத்தை குறிவைத்து இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் விமானப்படை லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறுகையில் “நுர் கான் விமானத்தளம், ரபிக் விமானத்தளம் ஆகியவற்றில் இந்தியா தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது, மற்ற தளங்கள் பாதுகாப்பாக உ ள்ளன. ஆனால், இந்தத் தாக்குதலில் எந்த உயிர்சேதமும் இல்லை, பொருட்கள் இழப்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களுக்கு குறி வைக்கும் பாக்., நன்றி மறந்த துருக்கியுடன் நயவஞ்சக கூட்டணி.. அமிர்தசரஸில் ரெட் அலர்ட்..!
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “இந்தியா சார்பில் வானில் இருந்து இடைமறி்த்து தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு முக்கிய தளங்களாக இருந்த 3 விமானப்படைத் தளங்களும் தகர்க்கப்பட்டுள்ளன, இதனால் இந்தத் தளங்களில் இருந்து விமானங்களை கிளப்ப முடியாது எனத் தகவல்கள் தெரிவித்தன.

பாகிஸ்தான் தரப்பில் ட்ரோன்கள் மூலம் இந்தியாவின் 26 இடங்களில் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தி இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது. பாகிஸ்தான் ஏவிய 6 ஏவுகணைகளை இந்திய ராணுவம் இடைமறித்து வானிலேயே அழித்தது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவும், இந்திய விமானப்படைத் தளங்களையும், மக்கள் வாழும் பகுதிகளையும் குறிவைத்து தாக்க முயற்சித்ததாலும் இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “அப்பாவி இந்தியர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்றதால்தான் இந்தத் தாக்குதலை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் ராணுவ அலுவலகம், பயிற்சி மையத்தின் மீதோ, மக்கள் வாழுமிடங்கள் மீதோ இந்தியா தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் நேற்றுமுன்தினம் இரவு முதல் செய்யும் செயல் கிரிமினல் குற்றமாகும். இந்திய ராணுவ தளங்கள்மீது தாக்குதல் நடத்த பலமுறை முயன்றது பாகிஸ்தான், மக்கள் வாழும்பகுதியிலும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் குற்றப்பட்டியல் நீண்டுவருகிறது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை பதிலடியும், தற்காப்புத்தாக்குதலையும் மட்டுமே செய்கிறது” எனத் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் தரப்பில் இருந்து 36 இடங்களில் இருந்து இந்தியப் பகுதிக்கு அனுப்பப்பட்ட 300 முதல் 400 ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் பஞ்சாப்பில் பெரோஸ்பூரில் சிலர் காயமடைந்தனர். பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் இருக்கும் கிராமங்கள் அனைத்தும் பிளாக்அவுட் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் “ பாகிஸ்தான் செயல்களை ராணுவம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை, இந்திய ராணுவம் உச்சக் கட்ட உஷார் நிலையில் இருக்கிறது, இந்திய வான்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ராணுவ தளபதிக்கு கூடுதல் பவர்.. இனி ஒருத்தன் வாலாட்டக்கூடாது! ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 அதிரடி அப்டேட்!