அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதால், அங்கு தொழில் வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு பாதாளத்துக்கு சென்று விட்டது. அத்தியாவசிய தேவையான கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க கூட முடியாத நிலைமையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இந்நிலையில், 2024-25 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி இலக்கை பாகிஸ்தான் அரசு அடையவில்லை. திட்டமிடப்பட்ட 3.6 சதவீதத்திற்கு பதிலாக வெறும் 2.68 சதவீத வளர்ச்சி விகிதத்தை மட்டுமே அடைந்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு மேலும் நிதி நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது.

நாட்டின் மொத்த உற்பத்தி $411 பில்லியன் ஆக இருந்தாலும், தனிநபர் வருமானம் $1,824 ஆக உயர்ந்தாலும் – இவை எல்லாம் திட்ட இலக்குகளை எட்டவில்லை.விவசாயம் 1.8% வளர்ச்சி, தொழில்துறை 1.14% சரிவு – இந்த தரவுகள் எல்லாம் நாட்டின் நிதி மோசமான நிலையில் இருப்பதை நிரூபிக்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம் பாகிஸ்தான், அமெரிக்காவின் ஆதரவுடன் IMF-இல் இருந்து கடன் பெற்றது.

இதில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ₹8,500 கோடி கடன் வாங்கி உள்ளது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தாலும், அமெரிக்க ஆதரவு காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் ஒதுக்கப்பட்டது. இதில் இந்தியாவின் ₹500 கோடியும் அடங்குகிறது என்பது ஒரு வேதனை! ஆனாலும் பாகிஸ்தானால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே இரண்டு தவணைகள் வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட தவணைக்கு, ஐ.எம்.எப்., பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதையும் படிங்க: எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கவாதிகள்.. ஒன்னரை மணி நேரம் நடந்த சண்டை.. பி.எஸ்.எஃப் வீரர்கள் அதிர்ச்சி தகவல்..!

இதன் வாயிலாக, பாகிஸ்தானில் மின்சாரம், சமையல் காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கான வரியும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் நாட்டின் வளர்ச்சி குறைந்து வர, மறுபக்கம் கடன்களும் கூடியே வருகிறது. இதனை சமாளிக்க, சர்வதேச வணிக வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடன் ஏற்பாடுகள் மூலம் கூடுதலாக, 4.9 பில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பு படி ரூ.41,170 கோடி) கடன் வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதில், வணிக வங்கிகளிடம் இருந்து 7-8% வட்டியுடன் $2.64 பில்லியன் குறுகிய கால கடனாக பெற திட்டமிட்டுள்ளது.

மேலும், நீண்டகால கடனாக $2.27 பில்லியன் பெற, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு (Standard Chartered), துபாய் இஸ்லாமிய வங்கி, சீனாவின் ICBC போன்ற வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் ICBC வங்கியிடமிருந்து மட்டும் $1.1 பில்லியன் பெற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இது அனைத்தும் பாகிஸ்தானின் நிதித் திட்டத்தில் ஒரு அங்கமாகும். பாகிஸ்தானின் திட்டமிடல் செயலாளர் தலைமையில் நடந்த குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து, ஊக்குவித்து, பாதுகாப்பு அளிப்பதாக, பாகிஸ்தான் கடும் குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்ற பாகிஸ்தான் தற்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பலுசிஸ்தான் பாம் அட்டாக்கில் இந்தியாவுக்கு தொடர்பா? பொய் குற்றச்சாட்டுகளை அடித்து விடும் பாக்.,