பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதற்கான அறிகுறியா? பூகம்பமா? என விஞ்ஞானி டாக்டர்.ராம் ஸ்ரீவஸ்தவா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
விஞ்ஞானி டாக்டர். ராம் ஸ்ரீவஸ்தவா, ''இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் சர்கோதா அருகே அணு ஆயுத பதுங்கு குழிகளை குறிவைத்தது. அதே நேரத்தில் அங்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்'' என அதிர்ச்சியூட்டிள்ளார். ஆனாலும் இது அவரது தனிப்பட்ட கருத்து. அவரது இந்த கருத்து தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. சிலர் இதை அணு ஆயுத சோதனை என்றும், சிலர் இதை இந்தியாவின் முக்கிய வெற்றி என்றும் கருதுகின்றனர்.

டாக்டர் ராம் ஸ்ரீவஸ்தவா மேலும் இதுகுறித்து, ''பாகிஸ்தானின் சர்கோதா அருகே கட்டப்பட்ட அணு ஆயுத பதுங்கு குழிகளை பிரம்மோஸ் ஏவுகணை குறிவைத்தது. அதே நேரத்தில் அங்கு 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பதுங்கு குழிகள் நிலத்தடியில் கட்டப்பட்டு 1.5 மீட்டர் தடிமன் கொண்ட கான்கிரீட்டால் ஆனவை. இந்த நிலநடுக்கம் அணு ஆயுதங்களின் முடிவுக்கு அறிகுறியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தனது சொந்த சிந்தனை மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்...பீதியில் மக்கள்
. 
அவரது இந்த அறிக்கைக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் சிலர் இதை பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை என்று கூறுகின்றனர். அதே நேரத்தில், சிலர் இதை இந்தியாவின் நன்கு சிந்திக்கப்பட்ட உத்தியின் ஒரு பகுதி என்றும் கூறுகின்றனர். பாகிஸ்தானின் அணு ஆயுத தளம் சேதமடைந்து இருந்தால், அது உலகிற்கு நல்ல செய்தி என்றும் கூறுகின்றனர்.
மே 9- 10 ஆம் தேதி இரவு, பாகிஸ்தானின் பல பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர் கீழே இருந்தது. அதன் அட்சரேகை 29.67 ஆகவும் தீர்க்கரேகை 66.10 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதுவரை, இந்த விஷயத்தில் எந்த அரசு நிறுவனத்திடம் இருந்தும்,பா துகாப்புத் துறையிடம் இருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை. அதே நேரத்தில், டாக்டர் ஸ்ரீவஸ்தவாவின் இந்த யூகம் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. அவர் கூறியுள்ளதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
இதையும் படிங்க: உலக தலைவர்களுடன் போஸ் மட்டும்தான்... பாகிஸ்தானிடம் மாஸ்காட்ட முடிந்ததா மோடி..? ஜோதிமணி காட்டம்..!