பசிபிக் பெருங்கடலில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஹவாய் உள்ளிட்ட பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8.0 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அவை மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த பூகம்பம் கடலில் ஏற்பட்டதால், சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது . இதன் தாக்கம் பசிபிக் பெருங்கடலின் கடற்கரைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய மண்ணில் இதுவரை உயிர் சேதம் அல்லது சொத்து இழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை, ஆனால் நிலநடுக்கம் காரணமாக கடற்கரையோரத்தில் கட்டிடங்கள் குலுங்கும் வீடியோக்களும், மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன
இதையும் படிங்க: ரஷ்யாவில் அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 49 பேரின் கதி என்ன..??
USGS இன் படி, ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்கிற்கு கிழக்கே 85 மைல்கள் (136 கிலோமீட்டர்) தொலைவில், 12 மைல்கள் (19 கிலோமீட்டர்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய நிலநடுக்கத்தின் அளவு முதலில் 8.0 ஆக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் பின்னர் அதை 8.7 அளவிற்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் உள்ளூர் அதிகாரிகளின் எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், கடலோரப் பகுதிகளுக்கு தேவையற்ற பயணம் அல்லது கடல் நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுனாமி கண்காணிப்பு என்பது சுனாமி ஏற்படக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அது எவ்வளவு தீவிரமாக இருக்கும் அல்லது ஏற்படுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரஷ்யாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்: தேடுதல் தீவிரம்..!!