புரட்சி தமிழகம் கட்சியின் தலைவரான 'ஏர்போர்ட்' மூர்த்தி மீது தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் 6, 2025 அன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் நுழைவுவாயில் அருகே நடந்த ஒரு மோதலே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்க முயன்றனர்.
இதற்கு பதிலடியாக மூர்த்தியும் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் விசிக தரப்பினர் ஒருவருக்கு கத்தியால் காயம் ஏற்பட்டது. இதனால் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மெரினா காவல் நிலைய போலீசார் மூர்த்தியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விசிக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ஏர்போர்ட் மூர்த்தி தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் மீதும் கட்சி மீதும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செப்டம்பர் 14, 2025 அன்று ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு நபரை ஓராண்டு வரை சிறையில் தடுப்பு காவலில் வைக்க முடியும்.
இதையும் படிங்க: திருமா. திமுகவின் அடியாள்..! ஆதவ் அர்ஜுனா உருவ பொம்மையை எரித்த விசிகவினர்..! கொந்தளிப்பு..!
இது பொது அமைதி மற்றும் ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. குண்டர் தடுப்பு சட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதையும் படிங்க: பண்பாட்டை சிதைக்கும் கும்பல்... சதி முயற்சியை முறியடிக்கணும்... திருமா. திட்டவட்டம்..!