தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் அல்லது பரிசுத் தொகை வழங்கி வருகிறது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் அயராத உழைப்பைப் பாராட்டும் விதமாகவும், பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் நோக்கிலும் அறிவிக்கப்படுகிறது.
கடந்த 2025 பொங்கலுக்கு, தமிழக அரசு ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பு மிகை ஊதியம் வழங்கியது. அதன்படி, 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உச்சவரம்பு ரூ.3,000 வரை மிகை ஊதியம் வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஊதியம் அல்லது சிறப்பு ஊதிய அளவீட்டில் பணியாற்றும் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.
மேலும், 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தலா 3000 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர், முன்னாள் கிராம அலுவலருக்கு பொங்கல் பரிசு வழங்க 183 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2026 புத்தாண்டு... முதல்வருக்கு வாழ்த்து சொல்ல குவிந்த திமுக தொண்டர்கள்..!
சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 ரூபாய் மிகை ஊதியம் வழங்க முதலமைச்ச ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் சீ மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மிகை ஊதியம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: 2026 விபத்தில்லா புத்தாண்டு... தொய்வில்லா பாதுகாப்பு பணி... காவல்துறை அறிவிப்பு...!