செயற்கை நுண்ணறிவு, அதாவது ஏஐ, இப்போ உலகத்தை ஆட்டிப் படைக்குது. ஐடி, சினிமா, மருத்துவம், விவசாயம், கல்வினு எல்லா துறைகளிலும் ஏஐ-யோட ஆதிக்கம் பயங்கரமா வளர்ந்து வருது. ஆனா, இது ஒரு பக்கம் பயனுள்ளதா இருக்குற அதே நேரம், "நம்ம வேலைய இழக்க வைக்குமோ"னு ஒரு பயமும் மக்கள் மனசுல இருக்கு.
உதாரணமா, சினிமாவை எடுத்துக்குவோம். இப்போ யாரும் நடிக்காமலே ஒரு முழு படத்தையே ஏஐ-ல உருவாக்க முடியுது. ஓபன் ஏஐ-யோட சாட்ஜிபிடி, எக்ஸ் தளத்தோட குரோக், கூகுளோட ஜெமினி மாதிரியான ஏஐ-க்கள் மக்கள் மத்தியில ரொம்ப பிரபலம். இவை கேட்ட சில வினாடிகளில் தகவல்களை குவிச்சு கொடுக்குது, இது பயனர்களுக்கு பயங்கர வசதியா இருக்கு.

இந்த ஏஐ-க்கள் பத்தி உலகமெங்கும் எக்ஸ் தளத்துல பலரும் பதிவு போட்டுட்டு இருக்காங்க. இதுல ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த டெட்சூனு ஒரு பயனரோட அனுபவம். இவர் மலை ஏறப் போனப்போ, குரோக் 4-ஓட கேமராவை அங்க இருந்த தாவரங்களை காட்டி, "இந்த செடிகளோட பெயர் என்ன?"னு கேட்டிருக்கார். உடனே குரோக், ஒவ்வொரு தாவரத்தோட பெயரையும் சொல்லி, சிலவற்றை யூகத்தோடு துல்லியமா பதில் சொல்லியிருக்கு.
இதையும் படிங்க: ஆபாசமாக படம் வரைந்து பர்த் டே வாழ்த்து! சிக்குவாரா ட்ரம்ப்? ரூ. 80,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!
இதைப் பார்த்து வியந்து போன டெட்சூ, இந்த அனுபவத்தை எக்ஸ் தளத்துல பதிவு பண்ணாரு. இந்த வீடியோவை எக்ஸ் தளத்துல பகிர்ந்த எலான் மஸ்க், “எதை வேணா உங்க கேமராவுல காட்டுங்க, குரோக் அதை இனம் கண்டு சொல்லிடும். என் டாக்டரோட மருந்துச் சீட்டை கூட படிச்சு சொல்லிடும்!”னு பெருமையா பதிவு செய்திருக்கார்.
இந்த சம்பவம் ஏஐ-யோட திறனை உலகத்துக்கு காட்டுது. குரோக் மாதிரியான ஏஐ-க்கள், படங்களை பார்த்து உடனே பொருட்கள், தாவரங்கள், எழுத்துகளை இனம் கண்டு விளக்குறது இப்போ பயங்கர ட்ரெண்டா இருக்கு. இதனால, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், சாதாரண மக்கள் எல்லாருக்கும் வேலை எளிதாகுது.

ஆனா, இதே நேரத்துல, “ஏஐ வந்து எல்லா வேலையையும் எடுத்துக்குமோ”னு ஒரு கவலையும் இருக்கு. உதாரணமா, சினிமாவில் விஎஃப்எக்ஸ், எடிட்டிங், ஸ்கிரிப்ட் எழுதுறது முதல் கதாபாத்திரங்களை உருவாக்குற வரை ஏஐ செய்ய ஆரம்பிச்சிருக்கு.
இதனால, ஆர்ட்டிஸ்ட்கள், எழுத்தாளர்கள் மாதிரியானவங்களுக்கு வேலை பறி போகுமோனு அச்சம் இருக்கு.இருந்தாலும், ஏஐ-யோட நன்மைகள் அதிகம். மருத்துவத்துல நோய்களை முன்கூட்டியே கண்டுபிடிக்க, விவசாயத்துல மண்ணோட தன்மையை ஆராய, கல்வியில் மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டுதல் கொடுக்க ஏஐ பயன்படுது.
இந்தியாவில கூட, இஸ்ரோ மாதிரியான அமைப்புகள் ஏஐ-யை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துறாங்க. ஆனா, இதை ஒழுங்கு படுத்தாட்டி, தவறான தகவல்களோ, தனியார் தரவு திருட்டோ நடக்க வாய்ப்பிருக்கு. எலான் மஸ்க் சொல்ற மாதிரி, “குரோக் உங்களோட கண்ணு மாதிரி எல்லாத்தையும் பார்த்து சொல்லும்”னு இருந்தாலும், இதோட பொறுப்பான பயன்பாடு முக்கியம். இந்த ஏஐ புரட்சி, உலகத்தை எங்க கூட்டிட்டு போகுதுன்னு இனி பார்க்கலாம்!
இதையும் படிங்க: I Hate Politics.. அரசியலை விரும்புனது இல்லை.. ஆனா.. முதல்வன் பட டயலாக் பேசும் எலான் மஸ்க்..!