மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதற்கான எந்தவொரு ஆதாரமும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் எந்தவொரு ஆக்கபூர்வமான ஆதாரங்களும் இல்லை என IAEA உறுதி செய்துள்ளது. ஈரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை என்றும், தற்போதையச் சூழலில் எந்தவொரு கதிரியக்கக் கசிவும் ஏற்படவில்லை என்றும் கிராஸி தெரிவித்துள்ளார்.

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதற்கான அல்லது சேதமடைந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என IAEA கூறியுள்ளது. இருப்பினும், ஈரானிய அணுசக்தி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போதையச் சூழல் கவலையளிப்பதாகவும், அணுசக்தி மையங்கள் மீதானத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "Operation Midnight Hammer" என்ற பெயரில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணுசக்தி முகமையின் இந்த அறிக்கை சர்வதேச அரங்கில் அமெரிக்காவிற்கு ஒரு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!