வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

எங்களுக்கு நீதி வேண்டும்.. எரித்துக் கொல்லப்பட்ட ஐடிஐ மாணவரின் உறவினர்கள் மறியல் போராட்டம்..!

மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட ஐ டி ஐ மாணவர் பிரசன்னா உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் இளமனூரில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இரண்டு பேர் சரணடைந்தனர். இறந்த நபர் ஐடிஐ மாணவர் என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மதுரை மாவட்டம் இளமனூர் அருகே உள்ள கண்மாய் கரையில் பகுதி எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் அருகே ரத்தக்கரை படிந்த கல் ஒன்று கிடந்துள்ளது. இதனை எடுத்து பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரை தலையில் கல்லை போட்டுக் கொன்றுவிட்டு தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுதந்திர நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் பிரசன்னா என்பது தெரியவந்தது. அவர் ஐடிஐயில் படித்து வந்துள்ளார். சடலம் அருகே கிடந்த சட்டையின் ஒரு பகுதி மற்றும் விரல்கள், செருப்பு ஆகியவற்றை அடையாளமாக வைத்து, இறந்தது பிரசன்னா என்பதை அவரது பெற்றோர் உறுதி செய்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இராமர், அபினேஷ் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  பிரசன்னாவின் பிரேத பரிசோதனை முடிந்து உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசன்னாவின் வீடு அமைந்துள்ள ஒத்தக்கடை சாலையில் உறவினர்கள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நண்பா.. நண்பீஸ் இனி வரலாறு பேசும்..! தவெக 2வது மாநாடு அறிவிப்பை பகிர்ந்த விஜய்..!

இதையும் படிங்க: கடலலையாய் முருக பக்தர்கள் மாநாட்டில் திரண்ட மக்கள்.. தமிழ்நாட்டில் பாஜவுக்கான எழுச்சி இது..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी