இந்தியாவல் கொரோனா பெருந்தொற்றில் 2வது அலையின்போது, ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2020ம் ஆண்டில் ஏற்கெனவே வெளியான உயிரிழப்புகளைவிட கூடுதலாக 21 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து 5 ஆண்டுகளுக்குப்பின் இந்திய பதிவாளர் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு இந்தியாவும் தப்பவில்லை. முதல் அலையில் லாக்டவுன்களை பிறப்பித்து பெரிதாக உயிரிழப்புகளை தவிர்த்த இந்தியா, 2வது அலையில் லாக்டவுன்கள் அறிவித்தும் வேகமாக நோய்தொற்று பரவியது. இதில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்..! முப்படை தளபதிகளுடன் ஆலோசிக்கும் ராஜ்நாத் சிங்..!
பிணவறையில் உடல்களை வைக்க இடமில்லாமலும்,எரியூட்டும் மையங்களில் உடல்களை காத்திருந்து எரித்தது போன்ற சம்பவங்கள் நடந்தன. இந்த 2வது அலையில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உறுதியாக வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் 2021ம் ஆண்டு குடிமைப் பதிவு முறையின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய புள்ளிவிவரங்கள் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ 2020ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் 81.20 லட்சம் பேர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 26 சதவீதம் பேர் அதாவது 21 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1.02 கோடிக்கும் அதிகரிக்கும். 2019ல் 75.90 பேர் உயிரிழந்ததாக அறிக்கை பதிவானது” எனத் தெரிவித்துள்ளது.
இறப்புக்கான மருத்துவச் சான்றிதழ் 2021 குறித்து இந்திய பதிவாளர் துறை வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பாதிக்கப்பட்டு அதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2020 இல் 1,60,618 ஆக இருந்தது, 2021 இல் 4,13,580 ஆக அதிகரித்துள்ளது, இதில் 2,67,363 ஆண்கள், 1,46,215 பெண்கள் எனத் தெரிவித்துள்ளது.

2020, 2021ல் 5,74,198 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பராமரித்த பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இறப்புக்கு குறிப்பிடப்படும் காரணமாக, நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு ஆகியவற்றால் 29.8% பேர் உயிரிழந்ததாகவும், கொரோனாவில் 17.3 % பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக 12.7% பேரும், நோய் தொற்று, ஒட்டுண்ணி நோயால் 6.1% பேரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் நடந்த பெரிய உயிரிழப்புக்கு கொரோனா 2வதுகாரணமாகவும், 2020ல் 3வது காரணமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், மேகாலயா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, பீகார், ஆந்திரப்பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், தெலங்கானா, ஜார்க்கண்ட், டெல்லி உள்பட 32 மாநிலங்கலில் 2020 முதல் 2021ம் ஆண்டில் கொரோனாவில் உயிரிழப்புகள் அதிகரித்தவாறு இருந்தன. 2020ல் முதல் 2021வரை பிறப்பு விகிதமும் 0.1 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா எங்க சகோதரன்..! பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு.. கொக்காரிக்கும் இஸ்ரேல் வீராங்கனைகள்..!