மத்திய வெளியுறவு அமைச்சர் 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் நகரில், பயங்கரவாதத்தால் ஏற்படும் மனித இழப்புகள் என்ற தலைப்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதை ஜெய்சங்கர் திறந்து வைத்தார். 1993 மும்பை குண்டுவெடிப்பு, 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதல் முதலான உலகளாவிய பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பின் நியூஸ்வீக் பத்திரிகை ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியது: பஹல்காம் தாக்குதல் வெறும் வன்முறை கிடையாது.
அது காஷ்மீர் பொருளாதாரத்தை சீர்குலைக்க, மத வெறியைத் தூண்ட மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட முயற்சி.பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் எந்தப் பகுதியில் இருந்தாலும் எல்லைகள் எங்களைத் தடுக்காது. நாங்கள் அவர்களைத் தாக்குவோம்.
இதையும் படிங்க: இந்தியாவை வம்புக்கு இழுக்கும் பாக்., தளபதி.. மீண்டும் காஷ்மீர் பிரச்னையை தூண்டிவிட திட்டம்..!

பயங்கரவாதத்தை அரசு ஆதரவுடன் செயல்படுத்துவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தை ஆதரிப்பது, நிதியளிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடும் அரசுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம். அணு ஆயுதத்தைக் காட்டி எங்களைப் பயமுறுத்தினால் அதற்கு அடிபணிய மாட்டோம். பயங்கரவாதிகள் தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம். அது எந்த இடமாக இருந்தாலும் சரி விட மாட்டோம்.
இந்தியா தாக்குவதற்காக பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் ரகசியமாக செயல்படவில்லை. அவை பாகிஸ்தான் நகரங்களில் வெளிப்படையாக இயங்குகின்றன. இந்தியா அழித்த அந்த பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் இடங்கள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ளே புகுந்து நாங்கள் தாக்குதல் நடத்தினோம்.

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகத்தையும், முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் மதவாத இடத்தையும் குறிவைத்து அழித்தோம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். முன்னதாக காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் இரு நாடுகளிடையே தீவிர சண்டை மூண்டது. பாகிஸ்தான் விமான ஏவுதளங்களை இந்திய விமானப்படை சுக்கு நூறாக்கியது. பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. அதன்பின்னர் பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதையும் படிங்க: இந்தியா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாக்.,? உளறிக்கொட்டிய கடற்படை கேப்டனால் சிக்கலில் பாஜக..!