ஆப்பிள் நிறுவனம் எப்போதுமே இரண்டு ப்ரோ மாடல் போன்களை விற்பனை செய்வது கிடையாது. ஐபோன் 15 ப்ரோ மாடல் வெளியீட்டில் இருந்தே இந்த முறையை பின்பற்றி வருகிறது.
ஐபோன் 15 ப்ரோவை பொறுத்தவரை மீதமுள்ள ஸ்டாக் கேரியர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் இருக்கலாம். அமேசான் கிரேட் இந்தியன் சேல் அல்லது பிளாக் ஃப்ரைடே போன்ற ஷாப்பிங் நிகழ்வுகளின் போது கூட தற்காலிக தள்ளுபடிகளுடன் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் அது அதிக நாட்களுக்கு கிடைக்காது.
ஐபோன் 15 தொடர் பற்றி என்ன?
ஐபோன் 17 வெளியீட்டிற்குப் பிறகு, ப்ரோ அல்லாத மாடல்கள் பொதுவாக நீண்ட நேரம் சந்தையில் கிடைக்கும். அதாவது ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் குறைந்த விலையில் தொடரும் என்றாலும், , ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் உடனடியாக விற்பனையை நிறுத்தக்கூடும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேட்டை காட்டிய வடமாநிலத்தவர்கள்... தட்டித்தூக்கி பாடம் புகட்டிய தமிழ்நாடு போலீஸ்...!
சில்லறை விற்பனையாளர்கள் தேவையைப் பொறுத்து அதிக விலைக் குறைப்புகளுடன் மீதமுள்ள யூனிட்களை பின்னர் விற்பனை செய்யலாம், ஆனால் அவை இனி ஆப்பிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் ஒரு பகுதியாக இருக்காது.
ஆப்பிள் வாட்ச் வரிசையில் மாற்றங்கள்:
இந்த நிகழ்வில் ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் அப்டேட்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10-க்கு பதிலாக 11 சீரிஸ் வரவுள்ளது. அடுத்ததாக ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3-யை அறிமுகப்படுத்தக்கூடும் என்பதால், ஆப்பிள் அல்ட்ரா 2 மாடல் விற்பனையும் விரைவில் நிறுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆப்பிள் வாட்ச் SE இன் எதிர்காலமும் நிச்சயமற்றதாக இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது.
வாங்குபவர்களுக்கு இது லாபமாக அமையுமா?
ஐபோன் 15 சீரிஸ் அல்லது கடந்த ஆண்டு ஆப்பிள் வாட்சை இன்னும் பரிசீலித்து வருபவர்களுக்கு, ஆப்பிளிடமிருந்து நேரடியாக அவற்றைப் பெறுவதற்கான இறுதி வாய்ப்பாக இது இருக்கலாம். சில்லறை விற்பனை நிலையங்கள் வரையறுக்கப்பட்ட நேர சலுகைகளை வழங்கக்கூடும், ஆனால் ஸ்டாக் விரைவில் தீர்ந்துவிடும். ஆப்பிளின் கவனம் ஐபோன் 17 வரிசையையும் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 ஐயும் விளம்பரப்படுத்துவதில் மாறும், அதே நேரத்தில் ஆறு பழைய சாதனங்கள் நிரந்தரமாக வெளியேறவுள்ளது.
இதையும் படிங்க: மறுபடியும் மாஸ்க் போடுங்க... தமிழ்நாடு முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு...!