ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் காரணமாக , அந்த நாடு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் 25 சதவீதம் இங்கு செல்கிறது. இதில், இந்தியாவிற்கு 50 சதவீத எல்என்ஜி மற்றும் சிஎன்ஜி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம், ஈரானின் முடிவு இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்ததால், மத்திய அரசு எண்ணெய் இறக்குமதிக்கான மாற்று வழிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களையும், அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் ஐரோப்பிய நாடுகளையும் மட்டுமே ஈரான் தடுக்கும் என்றும், மற்ற நாடுகளின் கப்பல்களைத் தாக்காது என்றும் ஈரான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பக்கத்திலிருந்து எண்ணெய் போக்குவரத்தை நம்பியுள்ள இந்தியா மற்றும் சீனாவிற்கு இது மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
சர்வதேச சட்டம் மற்றும் தொடர்புடைய தீர்மானங்களின்படி, போர்க் காலங்களில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்வதைக் கட்டுப்படுத்த ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு உரிமை உண்டு என்று ஈரானின் புரட்சிகரக் காவல்படை கூறியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவற்றின் ஆதரவாளர்களைச் சேர்ந்த எந்தவொரு கப்பல்களும் இந்த நீர்வழியில் காணப்பட்டால் தாக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக கூட்டு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து ஈரான் ஜலசந்தியை மூடியுள்ளது. இந்த நடவடிக்கை எண்ணெய் விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளது. இது உலக நிதி அமைப்பைப் பாதிக்கிறது.
இதையும் படிங்க: ஈரான் கப்பல் மீது அட்டாக்..!! இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான மார்கோ ரூபியோ தெரிவித்துள்ள கருத்துக்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த போரை அமெரிக்கா தொடங்கவில்லை. ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவது முன்கூட்டியே எங்களுக்கு தெரியும். அப்படி தாக்குதல் நடத்தப்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தும், அதனால் நாம் முதலில் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்திவிடுவோம் என்றே அமெரிக்கா தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரானின் கடற்படையே காலி... இறங்கிய அடிக்கும் அமெரிக்க ராணுவம்... தூள் தூளான 20 பேர் கப்பல்கள்...!