ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானியின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அலி லாரிஜானியின் மரணத்திற்கு ஈரான் தற்போது பழிவாங்கத் தயாராகியுள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களின் 61-வது அலையை ஈரான் இப்போது தொடங்கியுள்ளது.
ஈரானின் மிக முக்கியமான மூத்த தலைவராகவும், அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்த அலி லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்குவோம் என அந்நாட்டு ராணுவம் சூளுரைத்திருந்தது. அதன்படி, தற்போது ஏவுகணைத் தாக்குதல்களின் 61-வது அலையைத் தொடங்கியுள்ளது.இஸ்ரேல் மீது ஈரான் தனது 61-வது ஏவுகணைத் தாக்குதல் அலையைத் தொடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் இதற்கு முன் தொடுத்த 60 தாக்குதல்களைப் போலவே, இம்முறையும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேலை தாக்கியுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணையில் கிளஸ்டர் வெடிபொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதால், அதனை மீண்டும் மீண்டும் இடைமறித்து தாக்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING உச்சக்கட்ட அதி பயங்கரம்...!! - வெடித்து சிதறும் ஈரான் தலைநகரம்... குண்டு மழை பொழியும் இஸ்ரேல்....!
இஸ்ரேலிடம் தற்போதுள்ள வான் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டு அவற்றை முழுமையாக இடைமறித்துத் தடுப்பது மிகவும் கடினமானது ஏனெனில், ஏனெனில், இத்தகைய ஏவுகணைகள் இலக்கை நெருங்கும்போது பல சிறிய துண்டுகளாகச் சிதறுவதால் இடைமறித்துத் தடுப்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கும்.
ஈரான் நடத்திய தாக்குதலில் டெல் அவிவ் அருகேயுள்ள ரமத் கன் பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தின் நடைமேடை சேதமடைந்தது. மேலும் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவிய ஏவுகணை தாக்குதலில் முதிய தம்பதி உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!