பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து மனிதநேயத்தைக் கடந்து சென்றுள்ளது. காஸாவுக்குள் உணவுப்பொருட்கள் செல்லும் பாதையை இஸ்ரேல் அடைத்துவிட்டதால், காஸாவில் மக்கள் பசியாலும், பட்டினியாலும் கதறுகிறார்கள்.
உலக மத்திய சமையல் கூடம் என்று அழைக்கப்படும் வேர்ல்டு சென்ட்ரல் கிட்ச்சன் தினசரி 1.33லட்சம் பேருக்கு காஸாவில் உணவு வழங்கி வந்தது. ஆனால், அந்த அமைப்பிலும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சப்ளையும் இல்லாததைத் தொடர்ந்து தங்களின் பணியை நிறுத்தி காஸாவைவிட்டு வெளியேறுகிறது.

இதனால் காஸாவில் லட்சக்கணக்கான மக்கள் உணவுக்காக சாலையில் கையேந்துகிறார்கள். சிறிய ரொட்டித் துண்டுக்காகவும், 100 மில்லி கஞ்சிக்காகவும் மக்கள் பாத்திரத்தை ஏந்தி நிற்பது மனிதநேயத்தை கொல்வதுபோல் இருக்கிறது.
இதையும் படிங்க: பட்டினியில் பாலஸ்தீனியர்கள்: காஸாவுக்குள் உணவுப்பொருட்களை விடாமல் மறித்த இஸ்ரேல்..!
இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காஸாவுக்குள் வரும் மனிதநேய உதவிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி வருகிறது. இதனால் பாலஸ்தீனத்தில் வாழும் மக்கள் பஞ்சத்தில் வாழ்வதுபோல் செத்து மடிகிறார்கள் என்று சர்வதேச மனிதநேய அமைப்புகள் இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.
இருப்பினும் இஸ்ரேல் தனது பிடிவாதத்தில் இருந்து மாறவில்லை. கடந்த ஏப்ரலில், உலக உணவு திட்டம், காஸாவில் உணவு இருப்பு தீர்ந்துவிடும் நிலையில் இருக்கிறது, இஸ்ரேலின் தடையால் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கிறது என்று தெரிவித்தது.

காஸாவில் குழந்தைகளிடையே சத்துக்குறைபாடு, பசி அதிகரித்து, குழந்தைகள் மெலிந்தும், பலவீனமானவர்களாக காணப்படுகிறார்கள். தொடர்ந்து 3வது மாதமாக காஸாவுக்குள் உணவுப் பொருட்கள், சர்வதேச உதவிகள் ஏதும் செல்லாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. மனித நேய அமைப்புகள் ஏற்கெனவே தங்கள் வசம் இருந்த உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்துக்களை குழந்தைகளுக்கு வழங்கி வந்தது.இப்போது கையிருப்பு ஏதும் இல்லை என்பதால் குழந்தைகள் மெல்ல பசியால் உயிரிழக்கிறார்கள் என மனிதநேய அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
கடந்த மார்ச் 2ம் தேதி காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் விதித்த தடை இப்போது வரை தொடர்கிறது. பாலஸ்தீனத்து மக்களை பட்டினியாலும், பசியாலும் இயற்கை மரணம் அடையவைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது, இது மிககொடிய போர்க்குற்றம் என்று சர்வதேச மனிதநேய அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளன.

வேர்ல்ட் சென்ட்ரல் கிட்ச்சன் என்று கம்யூனிட்டி கிச்சன்களை நடத்தி, நூற்றுக்கணக்கான மக்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதுவும் உணவுப்பொருட்கள் இல்லாமல் மூடப்பட்டு, காஸாவை விட்டு வெளியேறுகிறது.
உணவு கிடைக்காமல், குறைந்தபட்சம் ரொட்டித்துண்டு கூட கிடைக்காமல் காஸாவில் மக்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு பட்டினியாலும், பசியாலும் உணவுக்காக உலகின் முன் கையேந்துகிறார்கள். காஸாவில் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன, பேக்கரிகள் மூடப்ப்பட்டுவிட்டன, குழாயில் குடிநீர் கூட சரியாக வருவதில்லை, இதனால் மக்கள் பட்டினியின் கோரப்பிடியில் உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி இதுவரை காஸாவில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டகுழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் சிகிச்சை எடுத்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும், காஸாவில் உள்ள 200 ஊட்டச்சத்து மையங்களும் அடைக்கப்பட்டுவிட்டன எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தியாகிகளான தீவிரவாதிகள்... இந்தியாவுக்கு எதிராக மக்களின் மனதில் விஷம் ஏற்றி பாக்., நரித்தனம்..!