அசாமின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவரான ஜூபின் கார்க், அஸ்ஸாமீஸ் இசை உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர். அவரது இனிமையான குரலும், உணர்ச்சிகரமான பாடல்களும் மாநில மக்களின் இதயங்களைக் கவர்ந்தன. 1990களில் இருந்து அவர் அஸ்ஸாமீஸ், பெங்காலி, இந்தி மற்றும் பிற மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
அவரது பிரபல பாடல்கள் அசாமின் கலாச்சார அடையாளத்தின் சின்னங்களாக மாறியுள்ளன. ஜூபின் கார்க் தனது இசை மூலம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு, இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தவர். அவரது திடீர் மரணம் அசாமின் கலை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது அசாம் பாடகர் ஜுபின் கார்க் உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது மரணம் தொடர்பான விசாரணையின் போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியே வந்தன. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜுபின் மரண வழக்கில் அசாம் டிஎஸ்பியும், ஜுபின் கார்க் உறவினருமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: வெடிச்சு சிதற போகுது... முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!
ஜுபின் கார்க் ஸ்கூபா டைவிங் செய்தபோது சந்தீபன் கார்க் உடனிருந்ததாக கூறப்பட்டு உள்ளது. புலனாய்வு துறையினரின் தீவிர விசாரணைக்கு பின் சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும், போலீசாரின் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி கல்யாண சுந்தரத்தின் கார் கவிழ்ந்து விபத்து... போலீஸ் விசாரணை...!